Thursday 13 March 2014

என் வீட்டு பல்லியும், ஏழுமலையானும்

                                                             

              எல்லோரையும் போல எனக்கும் பல்லின்னா அலர்ஜி.வீட்டுல எந்த மூலையில் பார்த்தாலும் பல்லி இருக்கும் கிச்சனில்,பெட்ரூமில், சட்டை மாட்டும் ஹேங்கருக்கு பக்கத்தில் என எங்கு பார்த்தாலும்  பல்லிமயம். அதுவும் அது என்னைபார்த்து "உன்னால என்னை என்ன செய்ய முடியும்"ன்னு  கேட்கிறமாதிரி இருக்கும்.அந்த பல்லிகளை கொல்ல முடிவெடுத்து பல்லி மருந்தை கண்ணன் டிபார்ட்மெண்டில் வாங்கி வந்தேன்.அந்த மருந்து பல்லியை விரட்டும் ,நான் அதை பல்லிகள் அதிகம் உலவும் இடங்களாக பார்த்து வைத்தேன் .மருந்தின் வேலையால்  பல்லியின் நடமாட்டம் குறைந்தது .அப்புறம் அந்தவார வியாழன் வந்தது .ஒவ்வொரு வியாழனும் குளித்துவிட்டு வந்து சாமிக்கு பூ வைத்து பூஜைசெய்வது என் வழக்கம்.அப்போ ஏழுமலையான் போட்டோவுக்கு பூ வைக்கலாம்ன்னு கையை கொண்டுபோனேன், சரேல்ன்னு ஏழுமலையான் படத்துக்கு பின்னிருந்து பல்லி ஒன்று வெளிப்பட்டு என்னை பார்த்து நின்றது . "என்னை நீ தொந்தரவு செய்தால், நான் உன்னை தொந்தரவு செய்வேன்"என்று சொல்வது போல் இருந்தது,பின் அது மீண்டும் அந்த போட்டோவுக்கு பின்னாலேயே சென்று ஒளிந்துகொண்டது. அடுத்தவாரமும் அதேமாதிரி பூஜை பண்ணும்போது பாபா போட்டோவுக்கு பின்னாடி இருந்து வெளிபட்டுச்சு ..இது என்னை தடுமாற வைத்தது,யோசித்தேன்.

 

                அந்தவார  குங்குமத்தில் வெளிவரும் "சாய்பாபா" தொடரை படித்தபோது அதில் பாபா  சொல்வதாக வருவது "நாய்,பல்லி போன்ற உயிரினங்கள் அது  வசிக்கும் இடத்தில் மற்றவர்கள் வந்தாலும் அவர்களை விரட்டிவிட்டு ஆக்கிரமிக்க நினைப்பதில்லை,மனிதன் மட்டுமே அப்படி செய்கிறான்" என்பார் .அதே நேரத்தில் "ரமண மகரிஷி"யின் அனுபவமும் நியாபகத்துக்கு வந்தது.ஒருமுறை அவர் ஆசிரமத்துக்குள் பாம்பு வந்துவிட்டது மற்றவர்கள் அடிக்க போக ரமணர் அதை தடுத்து சொன்னாராம் "நாம்தான் அதனுடைய இடத்திற்கு வந்து ஆக்கிரமித்திருக்கிறோம் அதனால் அதை அடிக்காதீர்கள்". (ஆசிரமம் திருவண்ணாமலை மலை அடிவாரத்தில் வனப்பகுதியை ஒட்டி அமைந்திருக்கிறது)
                இது எனக்குள் மாற்றத்தை ஏற்படுத்தியது ,நம்ம வீட்டில்  பல்லிக்கும் இடமுண்டு அதை தடுக்க நாம் யார்?!! என முடிவுசெய்தேன் .உடனே அந்த பல்லி மருந்துகளை எடுத்து வெளியே எறிந்தேன் .இப்போது பல்லி சாமி படங்களுக்கு பின்னால் தென்படுவதில்லை .பழைய இடத்திலேயே பார்க்கமுடிகிறது.
               சிலருக்கு இது முட்டாள்தனமான பதிவாக தோன்றலாம் . பாவபுண்ணிய கணக்கில் எனக்கு நம்பிக்கையுண்டு .ஏனெனில் ஒரு வருடத்திற்கு முன்பு என் வீட்டில் செடிகள் வைத்திருக்கும் இடத்தில் ஓரு  "பச்சை பாம்பு" வந்தது நானாக சென்று அதை அடித்துகொன்றேன்.மனைவி ஒரு மாதம் கழித்து என் ஜாதகத்தை பார்த்தபோது அந்த ஜோசியக்காரர் நான் ஒரு பாம்பை கொன்றிருப்பேன் என அருகில் இருந்து பார்த்ததுபோல் சொல்லியிருக்கிறார்.
               உயிர் என்பது எல்லோருக்கும் பொதுவானது நாம் வலிமையாக இருப்பதால் அதை அழிக்கலாம் என்பதில் நியாயமில்லை.நம் பாவ புண்ணிய கணக்கு நம்முடன் எப்போதும் கூடவே இருக்கும் .அதில் இல்லாதவர்களை விட இயலாதவர்கள் ஆதரவற்ற குழந்தைகள் போன்றோருக்கு உதவி செய்து புண்ணிய கணக்கை சேர்த்து கொள்ளுதல் நலம் .
             இன்று மதியம் சாய்பாபா கோவிலுக்கு சென்று விட்டு வந்தபோது வாசல் கதவில் நிறைய எறும்புகள்.. கடித்த பிறகு பார்த்துக்கலாம் என நினைத்துக்கொண்டு பாபா கோவிலில் இருந்து கொண்டுவந்த பூவை "சாய்பாபா" படத்திற்கு அருகில் வைத்தேன்..!



4 comments:

  1. அருமையான பதிவு. பல்லியை பொதுவில் வீட்டை விட்டு விரட்டுவதில்லை. in fact பல்லி இல்லா வீட்டில் சிலர் குடியிருக்கக் கூட மறுப்பார். காஞ்சி வரதராஜ பெருமாள் கோவிலில் பல்லிக்கு ஒரு சந்நிதி உள்ளது. படியில் ஏறி உத்தரத்தில் இருக்கும் பல்லியைத் தொட்டு வணங்குவது வழக்கம். உங்களுக்கு இறை அருள் இருப்பதால் இறைவன் உங்கள் மனதில் இந்த மாதிரி மாற்று எண்ணங்களைப் புகுத்தி பல்லியையும் உங்கள் இல்ல வாசியாக ஆக்கிவிட்டான் :-)

    amas32

    ReplyDelete
    Replies
    1. நீங்கள் சொன்ன தகவல்கள் அனைத்தும் புது தகவல்கள் ..தெரிவித்தமைக்கு நன்றிகள் மேடம் .... காஞ்சி வரதராஜ பெருமாள் கோவிலுக்கு செல்லும்போது மறக்காமல் பார்ப்பேன் ..நன்றிகள் :)))

      Delete
  2. வணக்கம்...

    வலைச்சரம் மூலம் உங்கள் தளத்திற்கு வருகை… தொடர்கிறேன்... இந்த வார வலைச்சர ஆசிரியருக்கு நன்றி...

    உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...

    மேலும் விவரங்களுக்கு கீழுள்ள இணைப்பை சொடுக்கவும்... நன்றி...

    அறிமுகப்படுத்தியவர் : ரூபக் ராம் அவர்கள்

    அறிமுகப்படுத்தியவரின் தள இணைப்பு : கனவு மெய்ப்பட

    வலைச்சர தள இணைப்பு : பனியைத் தேடி - சிம்லா நகர்வலம்

    ReplyDelete
    Replies
    1. நன்றிகள் சார் ..மேலும் எழுத ஊக்கம் அளித்ததற்கு நன்றி ...ரூபக் ராம் அவர்களுக்கும் நன்றி !!

      Delete