Tuesday 2 October 2012

அழகென்ற சொல்லுக்கு

                                கண்டிப்பா இது அட்வைஸ் இல்ல 


               பதின்ம வயதுகளில் எல்லோருக்கும் வருவது போல எனக்கும் பரு வந்தது,, ஆனா முகமெல்லாம் வந்துருச்சு, ஏற்கனவே ஒல்லி (45கிலோ)  இதுல இதுவேற. அம்மா யாரோ கொடுத்தாங்கன்னு ஒரு மருந்து கொடுத்தாங்க, முகத்துக்கு போடுறதுக்குன்னு சொல்லி,நைட்டு போட்டுட்டு படுத்தாச்சு. காலையில பார்த்தா முகத்துல பரு இல்ல,ஆனா பரு இருந்த இடத்துல எல்லாம் உளிய வெச்சு குத்துன மாதிரி குழி.அன்னைக்கு ரொம்ப வருத்தப்பட்டேன்.

                 என் மேல் இருந்த கொஞ்ச நஞ்ச நம்பிக்கையும் போயிடுச்சி ஆனா குடும்பசூழல் அதைகுறித்து அதிக வருத்தப்படவிடல. சோத்துக்கே வழி இல்லாதப்போ சுகம்குறித்து கவலை எதற்கு?!! எப்படியோ தட்டுதடுமாறி ஐசிஐசிஐ பேங்க் ஏஜன்சில வேலைக்கு சேர்ந்துட்டேன்.அப்ப கூட  28-இஞ்ச் பேண்டையே பெல்ட்வெச்சு போட்டாத்தான் உடம்புல நிக்கும்கிற நிலம.. ஒல்லி, மாநிறம் , முகத்துல குழி எப்படி வரும் கான்ஃபிடென்ஸ்.. ஆனாலும் வேலையில கெட்டியா இருந்தேன்..கொஞ்சம் நல்லா வாயும் பேசுவேன்.

              அப்பதான் ஒரு கஸ்டமர பார்க்க போனேன்.அவரு நல்ல கஸ்டமரு 1 லட்சம் டெபாசிட் கொடுத்தாரு.வேலைமுடிஞ்சு கிளம்புனப்போ பேசிகிட்டே கூட வந்தாரு .நான் "என்னை மறந்துடாதீங்க சார் அடுத்த டெபாசிட்டுக்கும் என்னையே கூப்பிடுங்க" அப்டினேன்.அவரு "எப்படி சார் மறப்பேன் .உங்கள மறந்தாலும் உங்க ஹேர் ஸ்டைல மறக்கமாட்டேன்" அப்டின்னாரு..அப்பதான் என்னோட ஹேர் ஸ்டைலை நானே கவனிச்சேன் ..நான் தலையை ஆட்டி பேசும்போது ஆடும்படி ஃபிலெக்சிபிளாக இருந்தது அவரு என்னை நிஜமா  பாராட்டி அப்படி சொன்னாரான்னு கூட தெரியாது.

             ஆனா அன்னைக்குதான் மத்தவங்க நம்ம கவனிக்கிறாங்க., எல்லாரும் முகஅழகை மட்டும் கவனிக்கிறதில்ல,நம்மகிட்டயும் அடுத்தவங்க பாராட்ட ஒரு விசயம் இருக்குன்னு தெரிஞ்சுக்கிட்டேன் ( இந்த சம்பவத்துக்கு முன்னும் பின்னும், எப்பவும் இப்பவும் என் தலைமுடிய கவனிச்சதில்ல ) ஆனாலும் என் பதினைந்து வயதுக்கு பிறகு  இன்றுவரை பவுடர், ஃபேர் அன் லவ்லி போன்ற அழகுசாதன பொருட்களை நான் உபயோகப்படுத்தியதில்லை.

               இப்ப நான் உபயோகிக்கும் அழகு சாதன பொருட்கள் பாடிஸ்ப்ரே (மற்றவர்களின் நலன் கருதி ), சீப்பு- அதுவும் ஒருநாளைக்கு ஒரு தடவை இல்லைன்னா ரெண்டுதடவை ..அப்பஇருந்து இப்பவரை ஓரளவுக்கு ட்ரெஸிங் சென்ஸ் உண்டு...என்னோட உடம்புக்கு சூட் ஆகலைன்னா எவ்வளவு நல்லடிசைனா இருந்தாலும்  அந்த டிரெஸ் போடமாட்டேன் .இப்ப தலையில் பாதிமுடி கொட்டிருச்சு, நரைச்சும் போச்சு ,உடம்பு வெயிட்டும் போட்டாச்சு     (75 கிலோ) ஆனாலும் அழகுகுறித்த கவலைமட்டும் மறுபடி வரவே இல்ல...

              நாம அழகா இருந்தாலும், இல்லைன்னாலும் ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொன்னு பிடிக்கும்,நம்ம வேலையை சரியா செஞ்சாபோதும், சுத்தமா இருந்தாபோதும் .மத்தவங்களுக்கு நம்ம பிடிக்கும்.அதனால அழகு குறித்து யாரும் கவலைப்பட தேவையில்லை ..

மறுபடியும் சொல்றேன்,, இது கண்டிப்பா அட்வைஸ் இல்ல!!!