Monday 20 August 2012

நான் எப்படி கமல் ரசிகனாக மாறினேன்



                              நான் எப்படி கமல் ரசிகனாக மாறினேன்


                1980 களில் பிறந்த பெரும்பான்மையான குழந்தைகள் ரஜினி ரசிகர்களே ..நானும்  அதில் ஒருவனே ...நான்  எப்படிபட்ட ரசிகன் என்றால் "வெச்சுக்க வா  உன்னை  மட்டும்" பாடலுக்கு ரஜினியை போலவே உடலில் லைட்  கட்டிக்கொண்டு ஆடும் அளவுக்கு ...ஆச்சர்யம் அப்படி ஆடிய அடுத்தநாளே நான் கமல் ரசிகனாக மாறினேன்.என் பெரியம்மா மகனான என் அண்ணன் அப்போது கமல் ரசிகர் மன்றத்தில் மாவட்டஅளவில் முக்கிய பொறுப்பில் இருந்ததுடன் ,எங்கள்  ஏரியாவின் கமல் ரசிகர்மன்றத்தின் தலைவராகவும் இருந்தார் .வருடாவருடம் கமலின் பிறந்தநாளுக்கு கமல் படங்களை டிவி-வைத்து எங்கள் தெருவில் போடுவதை வழக்கமாக  கொண்டிருந்தனர் மன்றத்தினர்.அப்படி படம் போடுவதற்கு முன்புதான் நான் அந்த ரஜினி பாட்டுக்கு ஆடியது ...


              அன்று சகலகலா வல்லவன், தூங்காதே தம்பி பார்த்ததாக  நியாபகம்.அடுத்தநாள் பகலில் "பேர் சொல்லும் பிள்ளை" படத்தை ரசிகர்மன்றத்தினர் பக்கத்துவீட்டில் வைத்து பார்த்துக்கொண்டிருந்தனர்.நான் படம் பார்க்கபோனேன் ,பகல் என்பதால் வெளிச்சத்திற்காக கதவை மூடியிருந்தனர் கதவை திறக்கசொல்லி நான் கேட்டதுக்கு ரஜினி ரசிகன்தாண்டா நீ, அதுனால உன்னை உள்ளே விட முடியாது என்றார்கள். நான் எவ்வளவோ கெஞ்சி பார்த்தேன் வேலைக்கே ஆவல..அப்றம் அழுகைதான் ..எங்க அண்ணன் கொஞ்சம் மனசுவந்து இனிமே கமல் ரசிகனாக மாறிடுறேன்னு சொல்லு நான் உன்ன உள்ள விட்றேன்...சரிண்ணா இன்னேலேர்ந்து நான் கமல் ரசிகன்‍‍‍ -இது நானு.
            அன்று பேர் சொல்லும் பிள்ளை பிள்ளைக்காக கமல் ரசிகனாக மாறியவன் விசயத்தில் வந்த ஆச்சர்யமான அதிர்ச்சிதான் "குணா"
குணா படம் பார்த்துவிட்டு வந்தபின் எதோ ஒன்று உறுத்திகொண்டே இருந்தது.ஆனால் அது கமலின் நடிப்பும், திரைக்கதையும்தான் என உணருமளவுக்கு பகுத்தறிய முடியவில்லை.இதற்கிடையில் பார்த்த "தளபதி" எனக்கு பெரியபாதிப்பு எதையும் ஏற்படுத்தவில்லை..
             சிலநாட்கள் கழித்து இங்கு தேவர்மகனும் அங்கு பாண்டியனும் ரிலீஸ்.வழக்கத்திற்க்கு மாறாக கமல் படத்தை நெருங்கமுடியல.பாண்டியன் பார்த்தாச்சு "கடி".கிட்டதட்ட 15 நாளுக்கு அப்புறம் தேவர்மகனுக்கு சென்றால் டிக்கெட் கிடைக்கும் என்ற நிலை.எங்க கார்த்தி அண்ணனை கூட்டிட்டு கிளம்பியாச்சு.
                 ஈரோட்ல முட்டை கொட்டாய் எனப்படும் ஆனூர் தியேட்டரில் படம்ஓடுது. அந்த தியேட்டர்காரன் ஒவ்வொரு 4 ரோவையும் ஒரு கிளாஸா பிரிச்சிடுவான்.இதுல பாதிக்கு மேல ப்ளாக்ல டிக்கெட்டை தியேட்டர்காரனே விப்பான். நாங்க வாங்கினது 1 கிளாஸ் டிக்கெட்.ஆனா எங்களுக்கு இடம் கிடைச்சதென்னவோ முதல்வரிசை சிவாஜி அறிமுகம் முடிஞ்சு உள்ள போறோம் ..
            டிரெயின் வருது திரையை அண்ணாந்து பார்த்தபடி நான் இருக்கேன் கமல் டிரெயின்ல இருந்து வெளிய வர்றார்,, ரசிகர்களின் கைதட்டல்களோடு அப்டியே கண்ணு முன்னாடி பிரம்மாண்டமா தெரியுறார். அப்டியே மண்டைக்குள்ளும் இறங்குறார் கமல். முதல்வரிசை கழுத்துவழி தெரியல..படம் ஓடுது,, சிறுவனும் புரிந்துகொள்ளும் எளிதான அதே சமயம் அழுத்தமான திரைக்கதை..அந்தகிளைமாக்ஸ் மகா அழுத்தம் "போய் புள்ளைங்கள படிக்க வைங்கடா" வசனம் காதில் ஒலித்துக்கொண்டே இருக்கிறது..கமல் அரெஸ்ட் செய்யப்பட்டு டிரெயினில் ஏறி வணக்கம்  சொல்லும்போது படத்தின் ஆரம்பத்தில் பார்த்த கமலின் பிரம்மாண்டம் குறையாமல் கமல் இருக்கிறார். நான் கமலை உள்வாங்கிக்கொண்டேன்.



நான் முழு கமல் ரசிகனாக மாறிப்போன தருணம் அது.....

கமல் தொடருவார்.....