சாய்பாபா
குங்குமத்தில் வரும் சாய்பாபா தொடரை தொடர்ந்து படித்து வருகிறேன் .அதில் சென்றவாரம் படித்தது "பாபா எப்போதும் ஒரே வேளை 5 வீடுகளுக்கு மட்டும்தான் பிச்சை எடுக்க செல்வராம் .அதிலேயே அவருக்கு தேவையான பிச்சை கிடைத்துவிடுமாம்.கிடைத்த சாதம்,ரொட்டி,போளி இவற்றை தட்டில் வைத்து ஒன்றாக சாப்பிடுவார்..அதிலேயே அவரும் சாப்பிட்டுவிட்டு பக்தர்களுக்கும்,காக்கை ,குருவி, நாய் போன்றவற்றுக்கும் பகிர்ந்தளிப்பராம்.சில நேரங்களில் 4 ,5 தடவை பிச்சை எடுக்கசெல்வராம்..சில நேரங்களில் நாளைக்கு 12 முறை கூட பிச்சை எடுக்க செல்வாராம் ..ஆச்சர்யம் என்னவென்றால் அன்றைக்கு அவரைப்பார்க்க நிறைய விருந்தினர்கள் (பக்தர்கள்) வருவார்கள் எல்லா உணவும் காலியாகிவிடும் "இவ்வளவு பேர் வரப்போவது பாபாவுக்கு முன்கூட்டியே எப்படி தெரியும் என்று மக்கள் ஆச்சர்யமடைவார்கள்"
பாபாவின் புகழ்பெற்ற வாசகம் ஒன்று
"யார் நாக்கை அடக்குகிறார்களோ அவர்கள் வாழ்க்கையை வென்றவர்கள், உலகை வென்றவர்கள்"
இதற்கு ஏற்றாற்போல் ஒரு அனுபவம் எனக்கு கிடைத்தது....
உடுமலைப்பேட்டையில் சாய்பாபா கோயில் ஒன்று சமீபத்தில் கட்டிமுடிக்கப்பட்டு கும்பாபிஷேகம் செய்யப்பட்டது. அன்று அன்னதானமும் நடைபெற்றது.கும்பாபிஷேகம் நடந்த அன்று யாரும் எதிர்பாராத வகையில் 2000 க்கும் மேற்பட்ட பக்தர்கள் வந்து கலந்துகொண்டு அந்தவிழா மிக சிறப்பாக நடைபெற்றது..பிறகு 48 நாட்கள் மண்டலபூஜை நடைபெற்றது..அப்போது வாராவாரம் வியாழன் அன்று (பாபாவுக்கு உகந்தநாள் ) சிறப்பு பூஜைகள் நடைபெறும்.அன்று நான் உட்பட நிறைய பக்தர்கள் தங்கள் சக்திக்கு தகுந்தவாறு பொங்கல்,புளியோதரை, தயிர்சாதம், கேசரி ,லட்டு ,பூந்தி, சுண்டல், பிஸ்கட், பழங்கள் போன்ற உணவு பொருட்களை பாபா முன் படைத்து பூஜை முடிந்தபின்னர் அங்கு வந்திருக்கும் பக்தர்களுக்கு வினியோகிப்போம்..அன்று சுமார் 1000க்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்துகொள்வார்கள்.
இந்த கூட்டம் வியாழன் அன்று யாரும் எதிர்பாராதது. ஆனாலும் வந்திருக்கும் எல்லோருக்கும் வினியோகிக்க பிரசாதம் வந்துகொண்டே இருக்கும்.அன்று எல்லோருக்கு பிரசாதத்தை தொண்ணையில் போட்டு தருவது வழக்கம்.எல்லாரும் சரிசமமாக வரிசையில் வந்து பிரசாதம் வாங்க வருவார்கள்.ஒரு உள்ளங்கை அளவுள்ள தொண்ணையில் பொங்கல் புளியோதரை,கேசரி,சுண்டல் அனைத்தும் சிறிது சிறிதாக அதில் கலந்திருக்கும். யாரும் முகம் சுளிக்காமல் அதை பக்தியோடு வாங்கி சாப்பிடுவார்கள்.... வந்திருப்பவர் 2 பிஸ்கட்டாவது வாங்காமல் போகமுடியாது. அனைவருக்கும் பிரசாதம் கிடைத்துவிடும்.
இந்த நிகழ்வுகளை பிறகு யோசித்து பார்த்தபோது எனக்கு தோன்றியது ....
1.பாபா இப்போதும் தன்னை தேடி வருபவர்களை பசியுடன் அனுப்புவதில்லை.
2.எல்லோரையும் சரிசமமாக நடத்துகிறார்
3.எதிர்பார்க்காமல் எவ்வளவு பேர் வந்தாலும் கூட அவர்களையும் பசியுடன் அனுப்புவதில்லை
4.மேற்கூறிய "யார் நாக்கை அடக்குகிறார்களோ அவர்கள் வாழ்க்கையை வென்றவர்கள் உலகை வென்றவர்கள்" தத்துவத்திற்கு ஏற்ப பக்தர்களுக்கு அனுபவத்தை தருகிறார்.
5.தானம் செய்தவருக்கு பிறருக்கு உதவிய சந்தோசத்தை அனுபவமாக தருகிறார்.
பாபா முக்தியடைந்த இந்நாளில் அவரை பற்றிய இந்த செய்தியை பகிர்ந்துகொண்டதில் மகிழ்ச்சி..
சாயி கவசம்
ஓம் சாயி நமோ நம!
ஸ்ரீ சாயி நமோ நம!
ஜெயஜெய சாயி நமோ நம!
ஸ்ரீ சாயி நமோ நம!
ஜெயஜெய சாயி நமோ நம!
சற்குரு சாயி நமோ நம!
ஓம் சாய்ராம்...!
உங்கள் பதிவு எனக்கு வரமாக அமைந்துள்ளது. விரதம் முடிந்து உங்களுடன் பகிர்கிறேன் :-)
ReplyDeleteamas32
நன்றிகள் மேடம் ...எனக்கு ஏற்பட்ட அனுபவம் ..நானும் இப்பொழுது உணவின் சுவையை கருத்தில் கொள்ளாமல் உண்ண முயற்சிக்கிறேன் .. :)))
Delete