Wednesday, 29 March 2017

ரஜினிகாந்த் - The Real Super Star

                                           


              ரஜினிகாந்த் என்ற பெயரை 70 இறுதிகளிலும் 80 களிலும் பிறந்த குழந்தைகள் மிக சாதாரணமாக உச்சரித்திருக்க மாட்டார்கள்.அதில் ஒரு ஸ்டைல் கலந்திருக்கும்.அப்போது பிறந்த குழந்தைகள் டீபால்டாக ரஜினி ஃபேன்தான்.பிறகு வளர்ந்துதான் அவரவர் ரசனைக்கு ஏற்ப கமல் விஜயகாந்த் சத்யராஜ் பிரபு கார்த்திக் என மற்றவர்களின் ஃபேன் ஆவது..இது என்வரையிலும் உண்மை.நான் 7 வயதுவரை ரஜினி ஃபேன்தான்..பிறகுதான் கமல் விசிறி ஆனது...ஆனாலும் ஒவ்வொரு ரஜினி பட ரிலீசின் போதும் உள்ளே இருக்கும் ரஜினி ரசிகன் அட்டெண்டன்ஸ் போட்டுவிடுவான்.எம் ஜி ஆர் சிவாஜி நடிக்க ஆரம்பித்தபின் மிக அழகாக சிவப்பாக இருப்பவர்கள் மட்டும்தான் ஹீரோக்கள் அதை மாற்றி கருப்பாக இருந்த ரஜினி என்ற இளைஞன் எல்லோரையும் தன் மேஜிக் நடிப்பால் வித்தியாச வில்லதனத்தால் வசீகரித்தான் .
                    ரஜினி ஒரு நாளில் நடிகன் ஆகிவிடவில்லை,ஆரம்பம் தொட்டே நடிகன்தான் .ரஜினி சிறுவயதில் இருந்து ஸ்டேஜ் டிராமாக்களில் நடித்துவந்தார் அங்குதான் அவரின் நடிப்புக்கான விதை ஊன்றப்பட்டது. தாயில்லா ரஜினிக்கு நண்பர்களே புகலிடம் .அதுவும் வயதுக்கு மீறிய நண்பர்கள் அவர்கள் மூலமாக கற்றதும் பெற்றதும் ஏராளம்.அண்ணன் வீட்டில் சும்மா உட்கார்ந்து சோறு சாப்பிடக்கூடாது என்பதற்காக கண்டக்டர் வேலைக்கு போனார்.ஒரு கட்டத்தில் மனம் ஒட்டாமல் வேலை செய்யபிடிக்காமல் சென்னைக்கு கிளம்பினார்.அவருக்கு நண்பனாக ஸ்பான்சராக இருந்தது அவருடைய நண்பர் ராஜ்பகதூர்தான் ,சிவாஜிராவ் சென்னைக்கு வந்தார்.


                ஃபிலிம் இண்ஸ்டியுட்டில் சேர்ந்த ரஜினிக்கு பாடம் எடுத்தவர்களில் முக்கியமானவர் சித்தலிங்கய்யா கன்னடத்தில் மிக முக்கிய இயக்குனர் நடிகர் முரளியின் தந்தை. ரஜினி மீது மிகுந்த அக்கறை கொண்டிருந்தார் பாலசந்தருக்கு ரஜினியை ரெக்கமெண்ட் செய்ததும் அவர்தான் என்ற தகவலும் உண்டு.எப்போதும் ஒரு கருத்து உண்டு ரஜினிக்கு உலக சினிமா குறித்து அறிவு கிடையாது ,எதோ மேலோட்டமாக நடிக்கிறார் என.இதே குற்றசாட்டு எம் ஜி ஆர் மீதும் உண்டு.பிலிம் இண்டியுட்டில் ரஜினி பார்த்தது உலக சினிமாக்களே..ரஜினியின் நடிப்பு மேலோட்டமான நடிப்பு இல்லை எது தேவையோ அது இருக்கும். விஜய் சொன்னது போல் "ஒரே டான் கேரக்டர்தான்  பில்லா-வில் ஒரு மாதிரியும் பாட்ஷா-வில் ஒரு மாதிரியும் கபாலி-யில் ஒரு மாதிரியும் வித்தியாசம் காட்டி அவருக்கு நடிக்க தெரியும்". இது தெரியாமல் நடந்த ஆக்சிடெண்ட் அல்ல ரஜினி எப்படி காலத்துக்கு தகுந்தாற்போல் தன்னை தகவமைத்துக்கொண்டார் என்பதற்கு சாட்சி. ஆங்கில பாணி அதிக அலட்டல் இல்லாமல் நடித்த ரஜினியை நடிக்க தெரியவில்லை என்ற ஒரே கமெண்ட்டில் கடந்து விடுபவர்களை என்னவென்று சொல்ல.எம் ஜி ஆரும் ஆங்கில படங்களையே அதிகம் விரும்பி பார்ப்பார் அவர் கடைபிடித்ததும் ஆங்கில சினிமா பாணி நடிப்பே..ஆங்கில படங்களை எம் ஜி ஆருக்கு மொழி பெயர்த்து சொல்லும் வேலையை சிரமேற்கொண்டு செய்துவந்தவர் நடிகர் கோபாலகிருஷ்ணன்.. அய்யய்யோ எம் ஜி ஆர் தகவல்களுக்குள் போய்ட்டோம்..ரிட்டர்ன் டூ ரஜினி..


                     ஃபிலிம் இன்ஸ்டியுட்டில் உலக சினிமாக்கள் அதிகம் பார்த்த ரஜினிக்கு அங்கு அதிகம் திரையிடபட்ட தமிழ் படங்களில் நடித்த நடிகர்தான் ரஜினியை ஈர்த்தார் அவர்தான் சிவாஜி.ரஜினியின் ஸ்டைலுக்கு மூலதனம் உத்தமபுத்திரன் வில்லன் சிவாஜிதான் என ரஜினியே குறிப்பிட்டிருக்கிறார்.. பிறகு ஸ்டைல் ஐகானாக ரஜினியை ஈர்த்தது சத்ருகன் சின்கா தான்.. சிவாஜியும் சத்ருகன் சின்காவும்தான் ரஜினியின் ஸ்டைல் ஐகான்கள்.தவிர அங்கு சிவாஜியின் படங்களை அதிகம் பார்த்த ரஜினி சிவாஜியின் ஃபேனாகத்தான் தன் படிப்பை முடித்தார்.இதுதான் பின்னாளில் ரஜினிக்கு எம் ஜி ஆரை பிடிக்காது என திரிக்கபட்டது..ரஜினி இன்னும் கூட சில விஷயங்கள் பேசும் போது எம் ஜி ஆரை பெருமையாக குறிப்பிடுவார் இயல்பாக அவர்மீது நல்லெண்ணம் இல்லாமலிருந்தால் அப்படி வராது.பிறகு பாலசந்தர் பார்வை பட்டு "சிவாஜிராவ் கெய்க்வாட்" ஆக இருந்தவர் ஒரு ஹோலி நாளில் "ரஜினி" ஆனது அனைவரும் அறிந்தது.ரஜினிக்கு நடிக்க தெரியாது என்று சொன்னால் நான் அவசரமாக மறுதலிப்பேன். கதாநாயகனாக நடித்த சமகால படங்களில் அப்படி தோணியிருக்கலாம் .ரஜினியின் நல்ல நடிப்பை பார்க்க  வேண்டு மெனில் அவரின் ஆரம்பகால படங்களே சிறந்த உதாரணம் அவர்கள், மூன்று முடிச்சு,பைரவி,காயத்ரி,புவனா ஒரு கேள்விக்குறி,தப்பு தாளங்கள், அவள் அப்படித்தான்,இளமை ஊஞ்சலாடுகிறது என பல படங்கள்.எனக்கு பிடித்த ரஜினி படம் எதுவென்றால் முதலில் "புவனா ஒரு கேள்விக்குறி" யைத்தான் சொல்லுவேன் அந்த படத்தில் மென்மையான நடிப்பில் உச்சம் தொட்டிருப்பார் ரஜினி.கதாநாயகனக நடித்து வந்த சிவக்குமாருக்கு நெகடிவ் ரோல் வில்லனாக நடித்து வந்த ரஜினிக்கு பாசிடிவ் ரோல் என பிளான் செய்து எடுக்கபட்ட படம்தான் எனினும் ரஜினி அந்த கேரக்டரில் கலக்கியிருப்பார் .
                       ரஜினி முதலில் ஹீரோவாக நடித்த "பைரவி" படத்தை தாணுவே எடுத்ததுபோல் ஒரு பில்டப் ஒடிக்கொண்டிருக்கிறது..அதன் அச்சாணி கலைஞானம் ஆவார்..இது நம்ம ஆளு படத்தில் ஃப்ராடு அய்யர் கேரக்டரில் நடித்தவர்தான் திரு.கலைஞானம் அவர்கள்.நிறைய கதைகள் எழுதியும் தேவர் பட டிஸ்கசனுக்கு சென்றும் தேவரின் நல்ல அபிமானத்தையும் கொஞ்சம் பணத்தையும் சம்பாதிக்கிறார்.அவருக்கு சொந்த படமெடுக்க ஆசைவர பைரவி கதையை எழுதி தேவரிடம் சொல்ல நான் பைனான்ஸ் செய்கிறேன் நீ படமெடு என சொல்கிறார் தேவர்.கூடவே முத்துராமனையோ சிவகுமாரையோ  கதாநாயகனாக போட சொல்கிறார்.சரியென்ற கலைஞானம் குறைந்த பட்ஜெட்டில் படமெடுக்க முடிவு செய்து அப்பொது வில்லனாக நடித்து கொண்டிருந்த ரஜினியை அதற்கு முன்பு அவர் பங்கு பெற்ற காயத்ரி படத்தின் மூலம் பெற்ற அனுபவத்தால் புக் செய்கிறார்.பிறகு அந்த படத்தில் தேவர் சொன்ன ஹீரோக்களை கலைஞானம் புக் செய்யாததால் பைனான்ஸ் தர மறுக்கிறார் தேவர்.சோர்ந்த கலைஞானம் தனக்கு தெரிந்த நண்பர்களிடம் கதையை சொல்லி படத்துக்கு பைனான்ஸ் வாங்க முற்படுகிறார்.அப்படி சொல்லும்போது ஒரு இரவில் அவருக்கு தெரிந்த சில Distributors முன்பும் கதை சொல்கிறார். அதில் ஒருவரான "அப்துல் காதர்" கதையை கேட்டு "அண்ணே கதை பிரமாதம் இந்த படம் எனக்குதான் தரணும் அவருக்கு இப்போதே அதிக ரசிகர்கள் இருக்கிறார்கள் அவரது வில்லன் நடிப்பை மக்கள் ரசிக்கிறார்கள் அவர் ஹீரோவாக நடிக்க வேண்டும் என நினைத்தேன் நீங்கள் நடிக்க வெச்சுட்டீங்க படம் கண்டிப்பா ஓடும்" என சொல்லி முதன்முதலில் 10000 ரூ கடனாக/அட்வான்சாக தருகிறார் படத்தை ட்ராப் செய்துவிடலாம் என்றிருந்த கலைஞானதுக்கு நம்பிக்கை பிறந்தது ( அந்த அப்துல்காதர்தான் பின்னாளில் "ராஜ்கிரண்" ஆனார் ).பின்னர் அதை கேள்விப்பட்ட பல Distributors ளும் பைனான்சியர்களும் பண உதவி செய்ய பைரவி வளர்ந்தது.அந்த படத்தை கேள்விபட்ட தாணு ரஜினியின் ரசிகர்கள் அதிகமாகி விட்டதை அறிந்து பிரம்மாண்டாமாக ரிலீஸ் செய்தார் (சென்னை உரிமம் என் நினைவு) ஸோ ரஜினியின் சம்பந்தி கஸ்தூரிராஜாவுக்கு வாழ்வளித்தது மட்டுமல்ல ரஜினிக்கும் மிக முக்கிய பிரேக்கை கொடுக்க காரணமாய் இருந்ததும் ராஜ்கிரண்தான். ஆனால் எங்கும் இதை குறிப்பிட்டு ராஜ்கிரண் பேசியதில்லை. தன்னை ஹீரோவாக போட்டு படமெடுத்த கலைஞானம் அவர்களை அருணாச்சலம் படத்தின் பார்ட்னர் ஆக்கி ஒரு பெரிய தொகையை கொடுத்தார்.அது கலைஞானம் அவர்கள் கடனில் இருந்து மீண்டுவர உதவியது.


                  தன் பேச்சை கேட்காமல் படமெடுத்த கலைஞானம் நஷ்டப்படப் போகிறார் என நினைத்து பைரவி படத்தை முதல்நாளே பார்த்த தேவருக்கு அதிர்ச்சி தேவரின் கணிப்பை பொய்யாக்கியிருந்தார் ரஜினி.கைதட்டலால் அதிர்ந்தது தியேட்டர்...தேவர் கலைஞானம் மூலமாக ரஜினியை கூப்பிடனுப்பி அதுவரை பெறாத அதிக சம்பளத்திற்கு புக் செய்கிறார்.ஆனால் சில தினங்களில் தேவர் இறந்துவிட ரஜினி தேவர் பிலிம்ஸ்க்கு நடித்து கொடுத்த படம்தான் அன்னை ஓர் ஆலயம்.ரஜினி தேவர் மீது வைத்திருந்த மரியாதை தான்  அதற்குபிறகும் நிறைய தேவர் பிலிம்ஸ் படங்களில் நடிக்க வைத்தது. தேவர்பிலிம்ஸ் நஷ்டப்பட்ட பிறகு தேவர் பிலிம்ஸ் கடைசியாக எடுத்த படம் தர்மத்தின் தலைவன் .அதில் சம்பளம் வாங்காமல் ரஜினி நடித்து தன் நன்றியை காண்பித்தார்.பிறகு தன் மகள் சவுந்தர்யா திருமணைத்தின் போதும் தேவரின் மகளுக்கு நிறைய பொருளதவி செய்தார்.ரஜினி தயாரிப்பாளர்கள் மீது வைத்திருந்த மதிப்பை அறிய ஆர் எம் வீரப்பனிடம் ரஜினி பேசியதை சுரேஷ் கிருஷ்ணா எழுதிய பாட்ஷாவும் நானும் புத்தகத்தில் காணலாம்.கமல் தன் படத்தில் ரசிகர்களின் ரசனையை முன்னோக்கி கொண்டு செல்வார் ,ரஜினி  தன் ரசிகர்களின் அப்போதைய பல்ஸை / ட்ரெண்டை  சரியாக கணித்து அதற்கேற்ப  படமெடுப்பார் ."பாட்ஷா"வும் அவர்தான் "கபாலி"யும் அவர்தான் .சந்திரமுகியை அடக்கிய வேட்டையனும் அவர்தான் .

                                      
                                        ரஜினியும் நானும் ஒரு இரவுப்பறவை என சாரு நிவேதிதா ( குமுதத்தில் வெளிவந்த தொடர் என நினைவு ) குறிப்பிட்டிருந்தார்.நான் தூக்கம் இல்லாமல் ஒவ்வொரு பாராக செல்லும் போது அப்போதுதான் ரஜினி சென்றார் என சொல்வார்கள்..பல நேரங்களில் அவரை ஒரே நாளில் வெவ்வேறு  பார்களில் பார்த்திருக்கிறேன் என்று குறிப்பிட்டிருக்கிறார்.ஒரு ஸ்கூட்டர் ஒரு சொந்த வீடு இருந்தால் போதும் என்ற லட்சியதுடன் சினிமாவில் நுழைந்த ரஜினிக்கு திடீர் புகழ் அளவுக்கதிகமான பணம் நிறைய குழப்பத்தையும் மன அழுத்தத்தையும் கொடுக்க மனம் மாறிப்போனார் மீண்டார். காதல் தோல்வி வேறு..கமல் யாரை காதலித்தார் என அதிக மக்களால் நம்பப்படுகிறதோ அவரைத்தான் ரஜினி காதலித்தார் அந்த மயிலும் ரஜினியைத்தான் காதலித்தது.ரஜினி பெண் கேட்டு வீட்டுக்கு போக பெண் கொடுக்கலாம் என முடிவு செய்தபோது கரண்ட் கட் ஆக பெண் தர மறுத்து விட்டார் பெண்ணின் அம்மா.அன்று கரண்ட் கட் ஆனது ரஜினியின் நல்லதுக்கு தான் என்பது அதன் பிறகு 30 ஆண்டுகளை கடந்து பார்க்கும் போதுதான் தெரிகிறது.திருமணதிற்கு பிறகும் ஆன்மீகத்தில் கொண்ட நாட்டம் காரணமாக குடும்பத்தை பிரிந்து துறவு வாழ்க்கையை  மேற்கொள்கிறார். அப்போது சின்ன பெண்ணாக இருந்த ஐஸ்வர்யா மாமனார் விட்டில் பராமரிக்கபடுகிறார். இந்த பிரிவால் நான் இழந்த ஐஸ்வர்யா-தான் எனக்கு ஸ்பெஷல் அவரின் குழந்தை பருவத்தை மிஸ் செய்துவிட்டேன் என சமீபத்தில் பேட்டியில் வருத்தப்பட்டார். மனைவி லதா ,பாலச்சந்தர் , கமல் முயற்சியால் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பினார் ரஜினி.பெர்சனல் வாழ்க்கையை பொருத்தவரை ரஜினிக்கு கமலும் ,கமலுக்கு ரஜினியும் பெர்சனல் அட்வைசர்கள்.நடிப்பதில் ஒரு பிரேக் விட்டு மீண்டும் நடிக்க வந்த ரஜினிக்கு ஹிட் கொடுத்து மீண்டும் பிரேக் கொடுத்த படம்தான் ஊர்க்காவலன் மனோபாலா இயக்கம்.எம் ஜி ஆரின் ( வீரப்பன் ) சத்யா மூவிஸ் தயாரிப்பு.இது எம் ஜி ஆர் க்கு ரஜினியை பிடிக்காது என்பவர்களின் கவனத்துக்கு. ரஜினியின் கம்பேக்கான ஊர்க்காவலன் படத்தில்தான் தன் ஹேர்ஸ்டைலை மாற்றினார். அதேபோல் ரஜினி ரியல் சால்ட் அண்ட் பெப்பர் லுக்கில் நடித்த முதல் படம் "வள்ளி". இப்போதிருக்கும் ஹேர்ஸ்டைல் விக் வைத்து நடித்த முதல்படம் "வீரா".


                 ஒரே மாதிரி படங்களில் இணைந்தும் தனித்தனியாகவும் நடித்துகொண்டிருந்தனர் ரஜினியும் கமலும் ( ப்ரியா ,குப்பத்து ராஜா என மாஸ் ஹிட்டடித்த வந்த பின்பும் கூட  கமலுடன் இணைந்து நடித்துக் கொண்டிருந்தார் ரஜினி ) 80 களுக்கு பிறகு கமலுக்கு ஒரே மாதிரி படங்களில் நடிப்பது போரடிக்க 81 ல் தன் நூறாவது படத்தில் சிவாஜி பாணியை தேர்ந்தெடுத்து "ராஜபார்வை"யில் நடித்தார் கமல்.ரஜினி அப்போது தேர்ந்தெடுத்தது எம் ஜி ஆர் பாணியில் ஆக்சன் + செண்டிமெண்ட் படங்கள்.சிம்பிளாக சொல்ல வேண்டுமென்றால் ரஜினி தேர்ந்தெடுத்தது சிங்கப்பாதை ..கமர்சியல் பாதை.அது ரஜினிக்கு மிகவும் கைகொடுத்தது.சூப்பர் ஸ்டார் பட்டமும் ரஜினிக்கு பொருந்தியது. கம்ர்சியல் ராஜா என்ற பட்டத்தை எளிமையாக பெறவும் இல்லை ,அதை எளிதாக தக்க வைத்துக்கொள்ளவும் இல்லை.மதிய வேளைகளில் பைட் சீன் எடுத்தால் சாப்பாடு சாப்பிட மாட்டார்.நல்லா சாப்பிட்டுவிட்டு நடித்தால் அங்கு காசு கொடுத்து சினிமா பார்க்க வரும் ரசிகனுக்கு நியாயம் செய்யும் வகையில் சுறுசுறுப்பாக நடிக்க முடியாது, அவனுக்கு நான் மத்தியானம் நடிக்கிறது தெரியாது என சொல்லி வெறும் ரசத்தை மட்டும் குடித்துவிட்டு நடிக்க போவாராம். அந்த அர்ப்பணிப்புதான் சூப்பர் ஸ்டார் பட்டத்தை உயிர்ப்புடன் வைத்திருந்தது.
                ரஜினி கதையை கேட்டு நடிக்க ஒப்புக்கொண்ட பிறகு படங்களில் குறுக்கீடு செய்யமாட்டார் அதே போல் ஒவ்வொரு படம் முடிந்து பூசணிக்காய் உடைத்ததும் அந்த சூட்டிங் ஸ்பாட்டிலேயே மீசையை மழித்துவிடுவார். பிறகு அந்த படத்தில் நடிக்க மாட்டேன் அனைத்தும் இயக்குனர் பொறுப்பு என்பது அதிலுள்ள தகவல். அப்படி மீசையை எடுத்தும் சில பேட்ச் ஒர்க்குகளுக்காக நடித்த படங்கள் சிவாஜி ( தெலுங்கு, ஹிந்தி பதிப்பு பர்ஸ்ட் நைட் ட்ரீம் சாங் சீன்களுக்காக ) குசேலன் -பசுபதி தோளில் கைபோட்டு  செல்லும் சீன். ரஜினி இசையமைப்பாளர் விஷயத்தில் கமல் போல கடுமை காட்டியதும் இல்லை கம்போசிங்கிலும் உட்கார்பவரும் இல்லை.ஆனால் பாடல் பிடிக்கவில்லை யெனில் ரிஜெக்ட் செய்துவிடுவார். 80 களுக்கு பிறகு கமல் படங்களுக்கு பெரும்பாலும் ராஜா இசையமைத்திருப்பார் ( தேவர் பிலிம்ஸ்,பாலாஜி தயாரிப்பு என சில விதிவிலக்குகள் உண்டு ). ரஜினி இயக்குனர் விரும்பும் இசையமைப்பாளர்களுடன் ஒர்க் செய்வார்.எஸ் பி பாலசுப்ரமணியம் ,விஜய் ஆனந்த் ,அம்சலேகா ,என பலர் ரஜினியின் படங்களுக்கு இசையமைத்தி ருக்கிறார்கள்.ஒரு சின்ன உதாரணம் வாசு இயக்கத்தில் நடித்த படத்தில் பாடல் படமாக்கபட்டபோது பாடலை கேட்ட ரஜினி முதல் நாள் நடிக்காமல் சென்றுவிடுகிறார் யாருக்கும் காரணம் சொல்லவில்லை..இரண்டாம் நாள் கேட்டுவிட்டு பாடல் ரொம்ப ஸ்லோவாக இருக்கிறது.ரசிகர்களுக்கு பிடிக்காது என்றார். வாசுவுக்கோ நல்ல பாடலை விட மனசில்லை..பாடலுக்கு இசையமைத்த இளையராஜா விடமே பிரச்சனையை கொண்டு செல்ல ,ராஜா ரஜினியை வர சொல்கிறார் "இந்த பாட்டு கண்டிப்பா ஹிட் ஆகும் தைரியமா நடி ரஜினி ,நான் கியாரண்டி" என்கிறார்.."நீங்க சொன்னா சரி சாமி" என நடித்து கொடுக்கிறார்.அந்த பாடல்தான் மன்னன் படத்தில் இடம் பெற்ற "அம்மா என்றழைக்காத உயிரில்லையே" பாடல்.எம் ஜி ஆர் காலத்திலிருந்து எத்தனையோ அம்மா பாடல்கள் இருந்தாலும் இதுதான் எனக்கு மிகவும் பிடித்த பாடல் அம்மா பாடலின் உச்சம் என்றும் சொல்லலாம்.இது ரசிகனுக்காக ரஜினி யோசிக்கிறார் என்பதற்கும்,பிடிக்கவில்லையெனில் ரிஜெக்ட் செய்வார் என்பதற்குமான உதாரணங்கள்.இதேபோல் பாட்ஷா வில் ரிஜெக்ட் செய்த சம்பவம் குறித்து சுரேஷ் கிருஷ்ணா எழுதியிருக்கிறார்.


             ரஜினி அந்த அளவுக்கு ஆக்சன் ஹீரோவோ அந்த அளவுக்கு காமெடியிலும் இறங்கி கலக்குவார்.உதாரணமாக அண்ணாமலை படத்தில் தொடை தட்டி சவால் விடும் வசனம் எவ்வளவு ரீச்சோ அதே அளவுக்கு ரீச் ஆனது "கடவுளே கடவுளே" இன்னும் தமிழ் சினிமாவில் அந்த வசனத்தை உபயோகப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள் ( சமீபத்தில் அரண்மனை 1 படத்தில் ) .தம்பிக்கு எந்த ஊரு ,உழைப்பாளி, பணக்காரன் சந்திரமுகி, வீரா,தம்பி  என பல படங்கள் ரஜினியின் ஆக்சன்+காமெடி நடிப்பின் சிறந்த உதாரணங்களில் சில என்றும் சொல்லலாம்.ஹீரோவின் பெயரில் படமெடுத்த ரஜினி பாபா வின் தோல்விக்கு பிறகு சந்திரமுகி என பெண் பெயரில் ஹாரர் காமெடி படம் எடுத்து ஹிட் கொடுக்கிறார்.தமிழில் ஹாரர் காமெடி படத்துக்கு பிள்ளையார் சுழி போட்டது சந்திரமுகி தான்.சந்திரமுகி கன்னட ரீமேக் என்றாலும் "லகலக" ரஜினியின் ஐடியாதான் கன்னடத்தில் இது கிடையாது.அந்த லகலக எனகுரல் கொடுத்தவர் குரலை எங்கேயோ கேட்டு அதை பயன்படுத்திக்கொள்ள ஐடியா கொடுத்ததும் ரஜினிதான்.எனக்கு அந்த படத்தில் பிடித்த கேரக்டர் "வேட்டையன்"தான்.


              ஆன்மீகம் என்பது தள்ளி நின்று பார்க்கையில் கடவுளை தொழச்சொல்லும்...மிக அருகில் சென்று பார்க்கையில் நம்மையே தொழச்சொல்லும், நமக்குள்ளிருக்கும்  கடவுளை தொழச்சொல்லும்.ரஜினி ஆன்மீகத்தில் இருந்தாலும் அவரின் முதல் குருவான ராகவேந்திரரில் இருந்து ஆரம்பித்து ராமகிருஷ்ண பரமஹம்சர்,ரமணர்,பாபா என அடுத்தடுத்த நிலைகளுக்கு செல்கிறார்.அப்போது பரமஹம்சர் எழுதிய "ஒரு யோகியின் சுயசரிதை" படிக்க அதில் இருந்து கிடைக்கும் உந்து சக்தியால் ஆரம்பித்ததே
"பாபா" அதில் ரஜினி பட்டத்தை தேடி வரச்செய்யும் மேஜிக் செக்கிங் சீன்  பரமஹம்ச யோகானந்தரின் அனுபவங்களே அது ,யோகானந்தர் அவர் அக்கா முன்பாக சக்தியை நிரூபித்து காட்டுவதற்காக செய்த விளையாட்டாகும். பாபா பட ஆரம்பத்தில் யோகிகள் வந்து குழந்தை குறித்து சொல்வது நிஜமாக யோகானந்தரின் தாய்க்கு நடந்த அனுபவம்தான் . பாபா தன்னுடைய கடைசி படம் என அறிவித்து படத்தை ஆரம்பித்தார் அதனாலும் அந்த படத்தில் கடவுள் குறித்த விஷயங்கள் ராமநாராயணன் படங்கள் போல் கிராபிக்ஸ்,  மாரியம்மன் போன்ற விஷயங்கள் இல்லாமல் "தெய்வம் மனுஷ ரூபேனா" கான்செப்டில் எடுக்கபட்டதாலும் படம் மக்களை ஈர்க்கவில்லை. போதாக்குறைக்கு ரஹ்மான் செமையாக ஒபி அடித்திருந்தார்.


             அண்ணாமலையில் அரசியல் பேச ஆரம்பித்தார்.95ல் முத்து-வில் நான் பாட்டுக்கு என் வழியில போய்கிட்டிருக்கேன் இடைஞ்சல் செஞ்சா கஷ்டம் உங்களுக்குத்தான் என ஜெ வையும் ,2003 ல் அய்யா உங்கள நம்பி ஆட்சிய கொடுத்தேன் ஆனா நீங்க வாக்கை காப்பாத்தல என கலைஞருக்கும் பன்ச் வைத்தார். பிறகு இரு தலைவர்களுக்கும் பொதுவானவராக அடையாளம் காட்டிக்கொண்டார்.யார் ஆட்சியில் நடிக்கிறாரோ அந்த கட்சி டிவிக்கு தான் நடிக்கும் படத்தின் ரைட்சை கொடுத்துவிடுவார்.இரு கட்சி தலைவர்கள் அழைத்தாலும் செல்வார் .
                ஆன்மீகத்தில் பலபடிகளை கடந்துவிட்டார் ரஜினி.90 களுக்கு பிறகு ஆன்மீகத்தில் மிகுந்த ஈடுபாடு காட்டினார் .அவர் பூஜையறையில் இருக்கும் போது ஒலித்தகுரல்தான் "அண்ணாமலை" என்றது முதலில் தலைப்பு பிறகுதான் கதை பாட்ஷாவுக்கும், படையப்பாவுக்கும் இதுதான் நடந்தது. ஆன்மீக தேடல் ஒரு பக்கம் இருந்தாலும் மக்களுக்கு உதவுவதில் குறை வைக்கவில்லை.இன்டர்நெட் கலாச்சாரங்கள் அதிகம் இல்லாத 90களிலேயே
மருத்துவ உதவி கேட்டு தகுந்த ஆதாரங்கள் வைத்து அவர் முகவரிக்கு அனுப்பினால் நிச்சயம் உதவி  கிடைக்கும் .எனக்கு தெரிந்த உறவினரின் மகன்களின் மேஜர் ஆபரேஷன்களுக்கு பெரும்தொகை கொடுத்து உதவினார்
( விஜயகாந்தும் உதவினார் ) அன்றே அன்பே சிவமென நம்பினார் செய்தார். இன்றும் அவர் மக்களுக்கு உதவி செய்துகொண்டுதான் இருக்கிறார் அதை விளம்பரபடுத்தி கொள்வதில்லை. இத்தனை செய்த பின்னும் ரஜினியை நோக்கி "ஏன் பிரியாணி போடவில்லை" என கேட்கிறோம் அந்த பணம் ரஜினிக்கு பிரச்சனையில்லை .அதற்காக வந்து எதாவது அசம்பாவிதம் ஏற்பட்டால் அது ரஜினியையே சேரும் என அவர் நினைக்கிறார் .அவர் பார்ப்பது பாவ புண்ணிய கணக்கு , பணக்கணக்கல்ல .
                      
                 


          உச்சகட்ட புகழையும் பணத்தையும் அனுபவித்து விட்ட ரஜினி சாரின்  விருப்பம் "சிவாஜிராவ் கெய்க்வாட்" ஆக இருக்கவேண்டும் என்பதே நம் விருப்பம் "ரஜினிகாந்த்"  சிவாஜி ராவ் கெய்க்வாட் ஆக மாறிவிடக்கூடாது என்பதே. இருவருக்கும் நடுவில் கடவுள் என்ன முடிவு செய்து வைத்திருக்கிறார் என்பது அவருக்கே வெளிச்சம்.இன்றும் மாறு வேடத்தில் பல இடங்களுக்கு சாதாரணணாக செல்கிறார் ,"ஈரோடு ரயில்வே ஸ்டேஷன் அருகே ரஜினியை பார்த்தேன் மாறுவேடத்தில் வந்திருந்தார்" என தெரிந்தவர் ஒருவர் சொன்ன போது அதை கண்டிப்பாக மறுக்க முடியவில்லை ஏனெனில் ஈரோட்டில் உள்ள ராகவேந்திரரின் கோவிலுக்கு ரஜினி வந்து சென்ற தகவல் ஏற்கனவே உண்டு .மாறுவேடத்தில் ரோட்டில் செல்வது ,சிறிய கடையாய் இருந்தாலும் டேஸ்ட்டாக இருக்கும் கடையில் சாப்பிடுவதும்  , மக்களுடன் மக்களாக சினிமா பார்ப்பதும் ரஜினிக்கு மிக பிடித்தமான மனதிற்கு நெருக்கமான விஷயங்கள். மற்றவர்களுக்கு உதவுவதில் , ஹிட் படம் கொடுத்து வசூல் மழை பொழிய வைப்பதில்  என ரஜினி இப்போதும் சூப்பர் ஸ்டார்தான் .தமிழ் சினிமாவின் நிரந்தர "சூப்பர் ஸ்டார்" ரஜினிகாந்த் மட்டுமே வேறு யாருக்கும் அந்த பட்டத்தை போட்டுக்கொள்ள தகுதி கிடையாது.


Reference

விகடன் ,வார இதழ்கள் , ரஜினி குறித்து வெளிவந்த புத்தகங்கள் , கேள்விப்பட்ட தகவல்கள்

31 comments:

  1. நான் போட்ட ஒரு ட்வீட் உங்களை இவ்வளவு பெரிய கட்டுரை எழுத வைக்கத் தூண்டியதோ?;-) ரஜினியின் நடிப்பைப் பற்றியும் அவரின் ஸ்டைலைப் பற்றியும் இன்னும் சொல்ல என்ன இருக்கிறது? உலகறிந்து ஒன்று! சூப்பர் ஸ்டார் பட்டத்தையே அவரின் நடிப்பும், அணுகுமுறையும், கமர்ஷியல் வெற்றிகளும் அவருக்குப் பெற்று தந்திருக்கிறது. அவரின் ஆன்மிக வளர்ச்சி இறைவன் கொடுத்த வரம். அவன் அருளால் தான் அவன் தாள் வணங்க முடியும். ஆன்மிகத்திலும் உச்ச நிலையில் உள்ளார்.

    நான் ரஜினியின் மிகப் பெரிய ரசிகை. கமலையும் பிடிக்கும் ஆனால் ரஜினியை சற்றே கூடுதலாகப் பிடிக்கும். பப்ளிக் ஃபிகர் என்று ஆன பிறகு சொன்னதை செய்ய வேண்டும் அல்லது சொல்லாமல் இருக்க வேண்டும். யாரும் அவரை பிரியாணி போடு என்று கட்டாயப் படுத்தலை. அவராகத் தான் சொன்னார், அதனால் ஏன் போடவில்லை என்று கேள்வி எழுகிறது. அதே போல தான் இராகவேந்திரா திருமண மண்டபத்தை தமிழக மக்களுக்கு எழுதி வைத்துவிட்டேன் என்றார். பின்பு அதில் குழப்பமான நிலை நீடிக்கிறது. இலங்கை போனால் என்ன எதிர்ப்பு வரும் என்பதை யோசித்து விட்டு பிறகு அதைப் பற்றி முடிவு எடுத்திருக்கலாம். ஆனால் முடிவெடுத்து அறிவித்தப் பின் பின் வாங்குவது சர்ச்சையை தான் எழுப்பும். அதே தான் அவரின் அரசியல் பிரவேச நிலைப்பாடும். ஒரு புதுப் பட ரிலீசின் போது ஏதாவது அறிக்கை விடுவார், அவரின் ரசிகர்களும் தலைவா ஆ என்று சொல்வதை நம்பினர். ஆனால் இப்போ அறிக்கை விட்டால் அதை ஆத்மத் தொண்டனும் கிண்டல் செய்கிறான். சொல், செயல் இரண்டிலும் கவனம் தேவை. குழப்பத்துக்குக் காரணம் அவர் ஆற்றில் ஒரு கால் சேற்றில் ஒரு கால் வைத்திருப்பதே. இன்னும் குடும்பம் அவரை நடிக்கச் சொல்கிறது, அவருக்கோ விட்டால் போதும் என்றிருக்கிறது.

    நல்ல கட்டுரை தெனாலி, வாழ்த்துகள் :-}

    amas32

    ReplyDelete
    Replies
    1. Hi Amas, i would like to ask few questions to you based on your reply. actually this question is for entire media and others who always say that rajini makes sensational statements only before his move release, can you please provide evidence or show me a single instance when he did that. i have been following rajini almost 25 years now, not even once he made such statement before his movie release. if an actor makes some statements before his movie release, do you think that only will help the movie to be success. Also, you questioned about his mandapam donated to ragavendra charitable trust. i am not sure what is your confusion on that, all earnings from that mandapam goes to his charitable trust for public support. you can use RTI act to get more info on the charitable trust what exactly it does. but we will never do that , and keep questioning his loyalty to tamil people. Also, when did he say he will put biryani? if you believe what ever comes in news paper or media from his mouth, i dont know what to say.

      Delete
    2. Hi Mrs. Sushima Shekar,

      I want to take this opportunity to tell you that whatever you have mentioned in your comments are not true and they are full of lies. Your comment shows that you don't like Rajini. Why did you bring Kamal here when the article is about Rajini? As commented by another person, can you please show to us where did Rajini say that he would put biryani? Either you need to be ignorant to believe everything that come in SM or you must be having other hidden agenda. What doubts do you have reg. Raghavendra Mandapam donation? Pls don't spread the rumors. Rajini's speech about it is - https://www.youtube.com/watch?v=zekv2cO5KF0.

      Delete
    3. I need to add more points Mrs. Sushima Shekar. BTW, Rajini didn't do any mistake or take wrong step reg. SL issue. By blaming Rajini on this issue, you are open-heartedly supporting other selfish TN politicians who stopped Rajini's trip to SL. Rajini never tried to be burden to others and his success is only due to his win-win policy. If giving political statement before the movie release makes the movies to run, then all the actors would follow this idea. Isn't it? This clearly shows that either you are easily fooled by other SM fake news or you want to believe the fake news that matches your interests. Please don't spread any news without any proof or authentication because it is not good for your pro-claimed status.

      Delete
    4. i missed answering your last line about his family wants him to continue to do the movies. i dont know why you are making such a wild assumptions, do you think you are more caring then his family? if you see rajini life closely, no body can control him. he makes his own decisions. also, if money making is only thing rajini interested, he can simply do commercials , i am sure if he agrees to do one, from local brand to international brands will be lined up. instead of making a movie once in 3 years and going through all the troubles, he can do few commercials per year to make more money. its very easy to judge others, so please think through before you comment. Thanks.

      Delete
  2. முதலில் இவ்வளவு பெரிய brief கமெண்டுக்கு நன்றிகள்..கட்டுரை போனவாரம் ஆரம்பித்தது 4 மணிநேரம் செலவழித்திருப்பேன் ..மெயின் பாயிண்ட்களாக சில வைத்துதான் எழுதுவேன் அதில் பிரியாணி மேட்டரும் ஒண்ணு உடல்நிலை சரியில்லாததால் முடிக்காமல் வைத்திருந்தேன் ஆக்சுவலா இன்னும் brief அதை எழுத நினைத்தேன் உங்களோட அந்த ட்விட் ஷார்ட்டாக தாண்ட வைத்துவிட்டது நீளமும் அதிகம் அதான் இன்னிக்கு ஆபீசில் உட்கார்ந்தே முடித்தேன் அதுக்கு காரணம் அந்த ட்விட்தான் ..Thanks Madam

    ReplyDelete
  3. Arumayana pathivu Boss, azhagana eluthukkal....neraya puthu vishayangal therinthathu, nandri :)

    ReplyDelete
  4. thanks for sharing the write up sir! today in social media we see more of negativity about SS, this makes us feel happy.

    ReplyDelete
    Replies
    1. i shared a true thats is Super Star Rajini :)) thanks

      Delete
  5. அருமையான பதிவு வாழ்த்துகிறேன்.
    ரஜினி நல்ல நடிகரும் ,சிறந்த மனிதரும் கூட ......வாழ்க தலைவர் ...

    ..

    ReplyDelete
  6. நல்லது மகிழ்ச்சி

    ReplyDelete
  7. Nice Article.. Loved it.. Thanks for many unknown infos.. God Bless Brother

    ReplyDelete
  8. Good article Mr. Thenali. All the Best. :)

    ReplyDelete
  9. ரொம்ப நல்லா எழுதி இருக்கீங்க.. தலைவரை பற்றி நல்லவிதமாக இருப்பதால் இதைக் கூறவில்லை..

    உண்மையில் நீங்கள் நடுநிலையே என்ற பெயரில் உண்மைக்கு புறம்பான கருத்துகளை கூறி அனைவரையும் சமாதானப்படுத்த முயற்சிக்காமல் எழுதி இருக்கிறீர்கள். பாராட்டுகள்.

    எந்த ஒரு இடத்திலும் நிலை மாறாமல் சீரான ஓட்டம்.. நீங்க நிஜமாகவே கமல் ரசிகரா? :-)

    ரஜினி தனது படம் வெளிவரும் சமயத்தில் அரசியல் பேசுகிறார் என்பது முற்றிலும் தவறான ஒன்று. கடந்த கபாலியை எடுத்துக்குங்க.. அவர் ட்விட்டர் பக்கத்துல கூட கபாலி பற்றி எதுவும் கூறவில்லை.

    அந்த சமயத்தில் நடக்கும் நிகழ்வுகளுக்கு அவர் அளிக்கும் பதில்கள் பட வெளியீட்டு சமயத்தில் விளம்பரத்துக்காக கூறப்படுகிறது என்று கூறப்படுகிறது..

    தனது படத்தின் Promotion கூட வராதவரை தான் உலகம் இது போல கூறுகிறது.

    அப்புறம் இந்த பிரியாணி விஷயம். அவர் ரசிகர்களுக்கு விருந்து வைக்கப்போவதாகக் கூறினார்.. அது பிரியாணியாக மற்றவர்களால் மாற்றம் செய்யப்பட்டது.

    நீங்கள் கூறியது போல இதனால் ஏற்படும் பிரச்சனைகள் குறித்து அவர் தவிர்த்து இருக்கலாம்.. ஆனால் அதே சமயம் இந்த யோசனையை முன்பே செய்து இதைக் கூறாமலே தவிர்த்து இருக்கலாம்.

    இது அவராக ஏற்படுத்திக்கொண்ட பிரச்சனை.

    ஒரு சின்ன உதாரணம் கூறி முடித்துக் கொள்கிறேன்.

    சமீபத்தில் ரஜினி ரசிகர்களை ஏப்ரல் 2 சந்திப்பதாக செய்தி வந்தது.

    இதற்கு அனைவரும் திட்டினார்கள். சமூகத்தளங்களில் கிண்டலடித்தார்கள்.

    தற்போது அது உண்மையல்ல என்று ரஜினி PRO அறிவித்து இருக்கிறார்.

    இதற்கும் அனைவரும் திட்டுகிறார்கள். சமூகத்தளங்களில் கிண்டலடிக்கிறார்கள்.

    இதில் ரஜினி என்ன செய்தார்? ஒன்றுமே கூறாமல் எவ்வளவு பிரச்சனை!

    ரஜினியாக இருப்பது எளிதல்ல.

    உங்களோட சில தகவல்கள் எனக்கு புதிது.. நன்றி.

    ReplyDelete
    Replies
    1. அதில் குறிப்பிட்டது போல் ஆரம்பத்தில் ரஜினி ரசிகன் ...மற்றபடி உண்மையைதானே சொல்றோம் அதான்.. ரஜினி ப்ரோமோஷன்களுக்கு வருவதில்லை என்பதை ரொம்பநாளாக கடை பிடித்தார் எந்திரன் சிவாஜிக்கு வந்தார் என நினைக்கிறேன் படம் முடிந்தால் அதிலிருந்து விலகிவிடுவார் வசூல் கணக்கெல்லாம் கண்டுகொள்ளமாட்டார் அவர் படத்தில் சம்பாதித்து செட்டில் ஆனவர்களே அவரை விமர்சிக்கும் போதுதான் அவரின் உழைப்பு பாம்புக்கு பால் வார்த்ததாகி விடுகிறது

      Delete
    2. Hi Giri,
      small correction, if i am right, he never announced that he will give treat to his fans for his daughter wedding. it was media speculation then, but never confirmed. i believe that's the problem, media uses his name to write what ever they want to improve their sales. He worked hard to get this popularity , but media just uses name to get the money. thanks.

      Delete
  10. அருமையான பகிர்வு கமல் வெறியருக்குள் ஒரு ரஜினி ரசிகர் ஆகா ��

    ReplyDelete
    Replies
    1. ஆரம்பம் அதானே ..மிக்க நன்றி

      Delete
  11. மிகவும் அருமையான கட்டுரை. ரஜினியை எண்பதுகளிலிருந்து நேசித்து, அவர் பற்றிய செய்திகள் அறிந்த எனக்குக்கூட, நீங்கள் எழுதியிருக்கிற ஓரிரு விஷயங்கள் புதுசு.

    ஒரு சிறு திருத்தம்: "பைரவி" படம் வெளிவந்த பிறகு, ரஜினி தேவருக்கு செய்து கொடுத்த முதல் படம் "தாய் மீது சத்தியம்," "அன்னை ஓர் ஆலயம்" அல்ல.

    Twitter@incredibala

    ReplyDelete
    Replies
    1. கமெண்டுக்கு நன்றி ...தாய் மீது சத்தியம் தான் கரெக்ட்டா .. தவறுக்கு வருந்துகிறேன்

      Delete
    2. தேவர் தயாரிப்பில் ரஜினியின் முதல் படம் அதுதான். மேலும்,
      ‪தேவர் மரணம் - 8-9-1978‬
      ‪தாய் மீது சத்தியம் - 30-10-1978‬
      ‪அன்னை ஓர் ஆலயம் - 19-10-1979‬

      Delete
  12. This comment has been removed by the author.

    ReplyDelete

  13. சூப்பர் ஸ்டார் ரஜினி அவர்கள் ஒரு நாகரிக அரசியலை கொண்டு வர முயற்சி செய்கிறார். . தமிழக மக்கள் இத்தருணத்தில் அவர்ளுக்கு தங்களது ஒத்துழைப்பை நல்க வேண்டும். தமிழகம் வளம் பெற தமிழக மக்கள் வாழ்வில் முன்னேற்றம் அடைய சூப்பர் ஸ்டார் ரஜினி அவர்கள் தமிழக முதல்வர் ஆனால் தான் முடியும்.

    ReplyDelete