சித்தர்கள் என்பவர்கள் யார்?
அவர்களை நாம் ஏன் தொழ வேண்டும்?
கடவுளை நம்புகிறேன் பிறகென்ன?
வட இந்தியர்கள் தொழும் சாய்பாபாவுக்கு ரொம்ப மார்க்கெட் செய்கிறார்கள்?!
மேற்கண்ட கேள்விகளுக்கு நீங்கள் இந்த பதிவை படித்து முடிக்கும்போது விடை கிடைக்குமென நம்புகிறேன்..
பால்யத்தில் நாம் மம்மு,புவ்வா,பப்பு-வாக அறிந்தவை நாம் வளர்ந்ததும் சாப்பாடு,பருப்பு சாம்பார் ஆவதை போல்தான் நாம் நம் பால்யத்தில் "சாமியார்" என்ற பொதுப்பெயரில் அறிந்தவர்களை வளர்ந்ததும் "சித்தர்கள்" "யோகிகள்" என அவர்களுக்கேயான பெயர்களில் அறியத்துவங்குகிறோம்.இதில் வேடிக் கை என்னவெனில் பல சித்தர்கள் அவர்களுக்கென சொந்தமாக பெயர்க ளைக் கூட வைத்துக்கொள்ளவில்லை.உதாரணத்திற்கு"பகவான் ரமணரை பலர் "ரமணர்" என்றழைத்தபோதும் ஆசிரம சம்பந்தமாக ஒரு பிரச்சனையில் டாக்குமெண்டில் அவர் கையெழுத்து இட வேண்டிய இடத்தில் ஒரு "கோடு" மட்டுமே போட்டார்..அவரின் இயற்பெயர் "வேங்கடராமன்"
கடவுள் இல்லையென மறுப்பவர்கள் கூட "தியானம்" பொய் என்று சொல்வதில்லை ஏனெனில் தியானத்திற்கு தேவை கடவுள் மீதான பற்றல்ல..
உங்கள் மனதை ஒருமுகப்படுத்தி செலுத்த உங்களுக்கு பிடித்த ஒரு விஷயம்.. அது உங்கள் மனதை அமைதியில் ஆழ்த்துவதாக இருக்க வேண்டும் அவ்வளவே.அது ஒரு குழந்தையாகக்கூட இருக்கலாம்.இதுபோல் தங்களின் மனதை ஒருமுகப்படுத்தி அதில் உச்சம் தொட்டு (சமாதி நிலை ) தங்களின் உடலை ஒரு கருவியாக பாவித்து அதை மக்களின் நன்மைக்கு பயன்படுத் தியவர்களே "சித்தர்கள்" என்றழைக்கப்ப்டுகிறார்கள்.அவர்கள் உடல், மனம், சுவை, பயம்,வலி,ஆசை அனைத்தையும் கடந்தவர்கள்.அவர்கள் மௌனத்தை தங்களின் மொழியாக தேர்ந்தெடுத்து பிரபஞ்சத்துடன் நெருக்கத்தை ஏற்படுத்திக்கொள்வார்கள்..அவர்களை பொறுத்தவரை மனிதன் ,நாய், குரங்கு ,மரம் அனைத்தும் ஒன்றுதான்...அவர்கள் அனைத்தையும் பிரபஞ்சத்தின் ஒரு பகுதியாகவே பார்க்கிறார்கள்.ஒருமித்த சக்தியால் பிரபஞ்சத்தோடு நெருக்கமாகி அவர்கள் கேட்பதை நினைப்பதை பிரபஞ்சம் தர பணிக்கிறார்கள். பிரபஞ்சமே கடவுள் ,கடவுளே பிரபஞ்சம்.
தமிழில் "ரகசியம்" ஆங்கிலத்தில் "சீக்ரெட்" என்றொரு புத்தகம் உண்டு.. அதன் அடக்கம் நாம் ஒரு பொருளை தீவிரமாக விரும்பும்போது பிரபஞ்சம் அதனை நமக்கு கொண்டுவந்து சேர்க்கும்.. உதாரணமாக "நாம் இன்னைக்கு பிரியாணி சாப்பிடலாம்" என காலையிலிருந்து நினைத்துக்கொண்டிருப்போம் திடீரென எதிர்படும் நண்பன் அதை நமக்காக கொண்டு வந்திருக்கலாம் அல்லது அன்று நம்மோடு சேர்ந்து பிரியாணி சாப்பிடுவதற்காக வந்திருக்கலாம் அதேநேரம் நான் கெட்டது நடக்கும்னு நினைச்சிகிட்டி ருந்தேன் அது நடந்துடுச்சுன்னும் சொல்லுவோம்..இதுவும் பிரபஞ்சத்தின் சக்திதான்.அன்று நீங்கள் அதிகமாக விரும்பியது கெட்ட விஷயம் அவ்வளவு தான் காலையில் எழுந்தவுடன் மனதுக்கு பிடித்த பாட்டை கேட்டிருப்போம் அல்லது பிடித்த விஷயம் நடந்திருக்கும் பிறகு அந்த நாள் முழுவதும் சந்தோசமாகவே கடக்கும்.இப்போது நீங்கள் அதிகம் விரும்பியது சந்தோஷம் அவ்வளவுதான். இதுபோல் அனுபவம் எனக்கு ஏற்படவே இல்லையென யாராவது சொன்னால் அது "முழுப்பொய்".சமீபித்திய பெரிய உதாரணம் ஏ ஆர் முருகதாஸ் அவர் வீட்டில் இன்கம்டாக்ஸ் ரைட் நடந்தபோது கைப்பற்றபட்ட டைரியில் ரமணா பட டைம் டைரி என நினைவு இந்த வருடம் இவ்வளவு சம்பளம் வாங்குவேன் இந்த வருடம் ஹிந்தி படம் இயக்குவேன் என லட்சியங்க ளை எழுதி வைத்தி ருந்தார் அதை நோக்கி உழைத்தார் . அந்த ரைடின் போது அந்த லட்சியங்களை அடைந்திருந்தார் கலைமணியிடம் ப்ரூப் ரைட்டராக வேலைசெய்தவர் இன்று இந்தியாவின் முக்கிய டைரக்டர்..இது விளையாட்ட ல்ல நமக்கு தேவையா னதை நாமே பிரபஞ்சத்திடம் கேட்டு பெருகிறோம். பெரும் வெற்றி பெற்றவர் களை பார்த்தால் அவர்கள் பின்னாலும் இதைப் போன்ற செயல்கள் இருக்கும். அது நமக்கு தெரியாமல் இருக்கலாம். இன்னும் சில பெரிய மனிதர்கள் அறச்சொல் சொல்லவே மாட்டார்கள் .பாசிடிவ்வாக பேசுவார்கள் இல்லையெனில் பேசவே மாட்டார்கள்.
என் சமீப அனுபவம் இது "நான் வாக்கிங் சென்றுவிட்டு வரும்போது டீக்கடையில் சூடாக போட்ட மெதுவடையில் ஆசைகொண்டு மெதுவடையை கடைக்குவெளியே நின்று சாப்பிட்டுக்கொண்டிருந்தேன் ..அப்போது பிச்சைக்காரர் தோற்றத்தில் ஒரு வயதான ஆள் என்னை பார்த்துக்கொண்டே கடந்து சென்றார்..அவர்கடந்து சில நிமிடம் கழித்து எனக்குள் ஏற்பட்ட உந்துதலால் ஒரு மெதுவடை வாங்கி கொண்டு அவரைத்தேடி அந்த திசையில் கொஞ்சதூரம் சென்று மெதுவடையை கொடுத்துவிட்டு வந்தேன்.அதை வாங்கியபோது அவரின் முகம் காட்டிய மகிழ்ச்சி என்பது ஆயுள் முழுமைக் கும் மறக்காது.இதுகூட பிரபஞ்சத்தின் செயலே..அவரின் விருப்பம் என் மூலமாக நிறைவேறிருக்கிறது..இந்த செயலில் நான் ஒரு கருவி மட்டுமே. இதில் சித்தர்கள் எங்கிருந்து வருகிறார்கள் கடவுளை ,பிரபஞ்சத்தை ஒரு செல்போன் கம்பெனியாக, சாட்டிலைட்டாக கொண்டால் செல்போன் டவராக இருந்து செல்போன்களான நமக்கு சிக்னல்கள் கொடுத்து நம்மை இயக்குப வர்கள் சித்தர்களே...ஒரு பில்டிங் கட்டி குடியிருக்கிறோம் என்றால் அந்த பில்டிங் கடவுள் என்றால் அதை சப்போர்ட் செய்யும் தூண்கள் சித்தர்கள்... இதை இன்னும் விளக்கமாக சொன்னால்...ஒரு கல்யாண மண்டபத்திற்கு போகிறோம் ,நாம் சாப்பிட வேண்டுமெனில் லைனில் காத்திருந்து ,நமக்கு முன்பு உட்கார்ந்தவர்களின் சீட்டுக்கு பின்னால் காத்திருந்து சாப்பிட உட்கார்ந் தால் வரிசையாக சாப்பாடு போடுவார்கள்.. கண்டிப்பாய் சாப்பாடு வரும். இதுவே நம் வீட்டுக்கு போய் அம்மாவிடம் பசிக்குது என்று சொல்லும் முன்பே "கை கால் கழுவிட்டு வாடா, சாப்பிடுவ" என்று அம்மா சொல்லி சாப்பாட்டு தட்டை வைத்துவிட்டு போவார்.இதில் கடவுளை கல்யாணத்தை நடத்துபவ ராகவும் ,சித்தர்களை நம் அம்மாவாகவும் கொண்டால் உங்களுக்கு சித்தர்களை ஏன் வணங்க சொல்கிறேன் என்று புரிந்துவிடும்.
நபிகள்,ஏசு,புத்தர்,அகத்தியர்,கோரக்கர்,பாபாஜி ,மகாவீரர், வள்ளலார் ,குருநானக்,ராகவேந்திரர்,சாய்பாபா,அருணகிரி நாதர்,ரமணர்,மானூர் சுவாமிகள்,கசவனம்பட்டி சாமிகள்,கோடி சுவாமிகள்,பாம்பன் சுவாமிகள்,மகா பெரியவர் ,யோகி ராம்சுரத் குமார் என இந்த லிஸ்டில் இருப்பவர்கள் அனைவரும் சித்தர்களே.தமிழ்நாட்டில் சித்தர்கள் ஜீவ சமாதி உள்ள இடங்களின் விவரம்.
http://asksolutionmdu.blogspot.in/2012/07/blog-post_19.html
http://vishraanthiyoga.org/saint_samadhis_india.html
சித்தர்கள் என்றால் எல்லோரும் சித்தர்கள் ஆகி விட முடியாது...சில சித்தர்கள் தனிமை விரும்பிகள் யார் கண்ணிலும் பட மாட்டார்கள்..சிலர் நம் கண்ணில் பட நம் முன்னே நடமாடுவார்கள்.சித்தர்கள் அனைவரும் சாப்பாட்டுக்கு வழியின்றி யாசகம் கேட்டு வந்து சித்தர்கள் ஆகவில்லை.. அவர்களுக்கு உணவு இரண்டாம் பட்சமே..எல்லா இடத்திலும் காற்று உண்டு சிறு இலைகள்,எடை குறைந்த பொருட்களை சுமந்து பறக்க வைக்கும் ஆனால் அந்த காற்றுக்கு நம்மை சுமக்கும் சக்தி இல்லை..அதே காற்று கார் டயருக்குள் இருக்கும் போது காரையும் சுமந்து அதிலிருக்கும் நம்மையும் சுமக்கும் வலிமை பெற்றுவிடுகிறது.அதுபோல அந்த காற்றை கூட உண்ண தெரிந்த சித்தர்கள் வாழ்ந்த/வாழ்கிற நாடு இது.சித்தர்கள் வெறுமனே உட்கார்ந்து கொண்டு பொழுதை போக்கவில்லை நம் அன்றாட வாழ்வில் பயன்படுத்த மருத்துவ குறிப்புகள் ,படிக்க வாழ்வியல் நூல்கள் ,எதிர்காலம் குறித்த கணிப்புகள் என அனைத்தையும் தந்துவிட்டுத்தான் போயிருக்கிறார்கள் .சில சித்தர்களின் நிகழ்வுகள்...
உதாரணமாக ரமணர் படித்து கொண்டிருந்த வயதில் திடீரென எண்ணம் தோன்றி அண்ணாமலைக்கு புறப்பட்டு வருகிறார்.இங்கு வந்து கோவிலில் மொட்டை அடித்துகொண்டு கொண்டுவந்திருந்த பணத்தை கோவில் குளத்தில் வீசியெறிந்து விட்டு வேட்டியை கிழித்து கோவணமாக அணிந்து கொண்டு தியானம் செய்ய அமர்கிறார்..அங்கு இருக்கும் சிறிய பையன்கள் தியானம் செய்ய விடுவதில்லை கல்லை எடுத்து அடிப்பது சத்தம் போடுவது என தொந்தரவு செய்த வண்ணம் இருக்கிறார்கள்.தொல்லை தாங்காமல்தான் பாம்பும் தேளும் கரையானும் இருக்கிற பாதாள லிங்க சன்னதியில் சென்று அமர்கிறார்.அங்கு அவர் உடலை கரையான் அரிக்க
ஆரம்பித்துவிட்டது கூடவே பூச்சிகள் எறும்புகளும் . ஆழ்நிலை தியானத்தில் உடலில் சீழ் வடிய அமர்ந்திருந்த அவரை சேஷாத்திரி சுவாமிகள் பார்த்து அவரை மீட்டு பாதுகாக்கிறார்.இந்த பூச்சிகள் கடித்ததன் பாதிப்பு அவரின் 50 வயது வரையிலும் இருந்தது..அவரின் இருப்பிடம் அறிந்து அவரை அழைத்து செல்ல வந்த அம்மா,உறவினர்களுடன் போக மறுத்துவிட்டார்.அவர் நினைத்திருந்தால் அவர்களுடன் சென்று எதாவது அரசு பணி பெற்று திருமணம் செய்து அவர் வாழ்நாளை கழித்திருக் கலாம்.ஆனால் அவருக்கு இறைவன் இட்ட பணி அதுவல்லவே..அவர் கஷ்டபட்டு வாழ்ந்தது அவருக்காக அல்ல நமக்காக.. அப்போதே படிப்பறிவு பெற்றிருந்த குடும்பம் தான் ரமணருடையது.ரமணரின் தந்தை நீதிபதியாக பணிபுரிந்தவர். ரமணருக்கு மானிட வடிவில் குரு என யாரும் இல்லை என்பதே சிறப்பு. ரமணாஸ்ரமத்தில் அமைதிதான் அவருடைய பாதை அவரை தேடி வருபவர்களின் மனதின் கேள்வியை மௌனத்தாலேயே தீர்த்து அனுப்பி விடுவார்.இந்தியாவுக்கு வந்த பால்பிராண்டன் வட இந்தியாவில் நிறைய சித்து விளையாட்டுகள் செய்பவர்களை ( பிளாக் மேஜிக் ) பார்த்துவிட்டு இந்தியாவை பற்றி தவறான முடிவுக்கு வருகிறார், அவர் திருவண்ணாமலை வந்து ரமணரை சந்தித்த பிறகுதான் அவருக்கு இந்திய ஆன்மீகத்தின் பெருமை புரிகிறது..அவர் ரமணருடன் தங்கி அவர் குறித்த மேன்மைகளை எழுதுகிறார்..அதுதான் வெளிநாடுகளில் இந்திய ஆன்மீகத்தின் மீது நம்பிக்கை வைக்கவும் இந்தியா ஒரு ஆன்மீக நாடு என்ற எண்ணத்தையும் வெளிநாட்டவர்க்கு உணர்த்திய முதல் புத்தகம். புத்தகத்தின் பெயர்
"A Search in Secret India " உண்மையான தவத்தில் இருப்பவர்களின் வாக்கு எவ்வளவு பலிதம் ஆகும் என்பதற்கு ஒரு உதாரணம்
ரமணர் திருவண்ணாமலையை ஒட்டியுள்ள ஒரு சிறிய கோவிலில் தங்கியிருந்த போது அங்குள்ள மரத்தில் குரங்குகள் வந்து விளையாடும் ஒருநாள் பார்த்தால் குரங்கு கூட்டத்தில் ஒரு குரங்கு அடிபட்டு ரத்த காயத்துடன் இருந்தது அதன் முன் கதை அங்குள்ள முஸ்லீம் ஒருவரின் தோட்டதில் போய் குரங்கு அதகளம் செய்ய அவர் தடியால் வெளுக்க குரங்கு ரத்த மயமானது.குரங்கை பார்த்த பகவான் ஈவு இரக்கமில்லாமல் அடிச்சிருக் காங்க, அவர்களுக்கும் பட்டாத்தான் தெரியுமென சொல்லிவிட்டு போய் விடுகிறார் ,நன்றாக இருந்த அந்த நபர் திடீரென காய்ச்சல் கண்டு படுக்கையில் விழுகிறார்.தொடர் காய்ச்சல் எங்கு பார்த்தும் சரியாகவில்லை மரண விளிம் பிற்கு போகிறார். அதற்குள் இந்த குரங்கு விஷயத்தை கேள்விப்பட்ட அவரது குடும்பம் ரமணரை தேடி வருகிறார்கள். " சாமி நீங்க சொல்லிதான் அவருக்கு உடம்புக்கு இப்படி ஆச்சாம் அவரை காப்பாற்றி கொடுங்கள் என அழுகிறார்கள் ,ரமணர் " நான் ஒண்ணும் சொல்லயே அம்மா அவருக்கு சரியாகிவிடும்ன்னு சொல்கிறார்.நீங்க அவரை மன்னித்து விபூதி கொடுக்க வேண்டும்ன்னு கேட்கிறார்கள் ,( அப்போது விபூதி கொடுக்கும் பழக்கம் எல்லாம் இல்லை ) அவர்களை சமாதானப்படுத்த முடியாமல் அடுப்பில் இருக்கும் சாம்பலை அள்ளிக்கொடுக்கிறார்.அந்த முஸ்லீம் நபரும் உடல்நலம் தேறி ரமணரை வந்து பார்க்கிறார்.இது அவரை அறியாமல் சொன்ன வார்த்தை அதற்கே இவ்வளவு வீரியம் என்றால் அறிந்து நம்மை ஆசிர்வதித்தால் எவ்வளவு நன்மை வந்து சேருமென பாருங்கள்.ரமணர் " யாரும் துறவறத்தை மேற்கொள்ள வேண்டாம் நியாயமான சம்சாரியாக இருப்பவர் ஒரு துறவிக்கு இணையானவர் "என்பார். ரமணரின் போதனை உள்கட என்பதே 'உள்கட உள்கட உள்கட" மீண்டும் மீண்டும் ஒலித்தால் கடவுள் ஆகும் அதைத்தான் அவர் செய்யச்சொன்னார்."நான் யார்" என்ற விசாரணையே முக்தி அடைய வழியென்றார்.
திருவண்ணாமலையில் சுடுகாட்டிலும் பாதையோரங்களிலும் படுத்து உறங்கி அழுக்கு போர்வையும் கையில் சிரட்டையுமாக திரிந்த யோகிராம் சுரத்குமார் வடநாட்டை சேர்ந்தவர் அதுவும் அக்காலத்தில் நன்றாக படித்த அவர் படித்து கலெக்டருக்கு இணையான படிப்பை படித்து முடித்திருந்தார் அவர் விரும்பியிருந்தால் கலெக்டராக பணியில் சேர்ந்திருக்கலாம் பிரிட்டிஷ் க்கு கீழ் பணிபுரிய மாட்டேன் என்று முடிவெடுத்த அவர் பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்தார். திருமணமாகி அவருக்கு குழந்தைகள் உண்டு .அவர் இலக்கின்றி நதிக்கரையில் அலைந்திருக்கிறார் அவர் இடம் இதுவென முடிவு செய்து தென் இந்தியா வுக்குள் கேரளா வந்து பிறகு திருவண்ணாமலை வந்து சேர்ந்தார்.சுடுகாட்டில் தங்கியிருந்த அவரை ஊருக்குள் தங்காமல் ஏன் சுடுகாட்டில் தங்குகிறீர்கள் எங்களுடன் வந்து தங்குங்கள் என்று சொன்னதற்கு சுடுகாட்டில் இருப்பவர்கள் இங்கிருப்பவர்கள் போல துன்பம் தருவதில்லை என்றார்.கடைசி வரை ஆசிரமம் அமைக்க ஒத்துக்கொள்ளவில்லை பக்தர் களின் வேண்டுகோளுக்கிணங்கி ஆசிரமம் கட்ட ஒத்துக்கொண்டவர் அங்கே அமைக்கபட்ட சிறு குடிலில் தான் தங்கியிருந்தார் அது இன்னும் உள்ளது. ஆசிரமம் கட்டி முடிக்கப்பட்டபோது அவர் முக்தியடைந்துவிட்டார்.ஒருமுறை அவரின் பக்தர் ஒருவர் தம்பதி சமேதமாக அடிக்கடி பார்க்க வருபவர்.இவர் சிரட்டையில் காபி டீ நீராகரங்களை குடிப்பதை பார்த்து ஒரு ஃபிளாஸ்க் வாங்கி அதில் காபி வாங்கி வருகிறார்.காபி குடித்தபிறகு
"இதை நீங்களே வைத்துக்கொள்ளுங்கள்" என்கிறார் பக்தர்.
இதைக்கேட்ட ராம்சுரத் குமார்
"இதை நீங்கள் எனக்கு கொடுத்து விட்டீர்கள் இது இப்போது என்னுடையது தானே" என்றார்
"ஆமாம் சாமி" என பக்தர் சொல்ல
"அப்போ நான் விரும்பியவருக்கு இதை கொடுக்கலாம்தானே" என்கிறார் "கொடுக்கலாமே சாமி" என்றதும்
அந்த பிளாஸ்க்கை அவர்களுக்கே அன்பளிப்பாக திருப்பி கொடுத்துவிடுகிறார். அவரிடம் காணிக்கையாக கொடுக்கும் பணத்துக்கும் இதே கதிதான் வரும் பக்தர்களுக்கு கொடுத்து விடுவார் திருமண தேவைக்கு எங்கு போவது என வந்து அவரிடம் வாங்கிய பணத்தில் திருமணம் நடந்தது உண்டு.இப்படி அடுத்த நாளுக்கென எதையும் சேர்த்து வைத்துக்கொண்டதில்லை அவர்.
அவர் மிக உடல் நலம் குன்றியிருந்தபோது பக்தர் எங்களின் துன்பங்களை எல்லாம் சரி செய்கிற நீங்கள் உங்கள் உடம்பை சரி செய்து கொள்ளக்கூடாதா என கேட்க "இந்த உடம்பு என்பது மண்ணும் தூசியும் இதில் ஒன்றுமில்லை நான் இல்லாவிடினும் என் ஆசி உங்களுக்கு எப்போதும் இருக்கும் "என்றார்.ஆசிரமம் கட்டபட்டபோது அவர் தரிசனதுக்கு அவரின் மகன் ஊரிலிருந்து வந்திருந்தார் .அருகில் இருந்தவரிடம் என்ன விஷயம் என கேட்க இனி உங்களுடன் தங்க வந்துள்ளார் என்றிருக்கிறார்கள் இன்றே அவன் ஊருக்கு செல்ல வேண்டும் என கண்டிப்பாக சொல்லிவிட்டார் யோகி.அன்றே கிளம்பினார் அவர் மகன். அவர் அப்படி வாழ்ந்தது நமக்காகத்தான்.எனக்கு ஏற்பட்ட அனுபவம் என் நண்பனுக்கு நீண்ட நாட்களாக திருமணம் கைகூட வில்லை. நாங்கள் போனவ ருடம் (முதல்முறை) அவர் ஆசிரமத்துக்கு போய்விட்டு கிளம்பும் போது திருமணம் நடக்க வேண்டினோம்.பிறகு பெண் பார்த்து கிடைக்காமல் தூரத்து சொந்தத்தில் ஆந்திராவில் மிகுந்த பிரச்சனை க்கு பிறகு திருமணம் முடிவானது அதாவது பெண்ணின் அம்மாவுக்கு சம்மதமே இல்லை. அவருக்கு தூரம் அதிகம் என்பதால் தமிழ்நாட்டில் பெண் தர விருப்பமில்லை .இவ்வளவு பிரச்சனைக்கு பிறகு நிச்சயதார்த்தம் நடந்த தேதியை எதேச்சையாக பார்த்தால் அன்று யோகி ராம்சுரத்குமார் அவர்களின் பிறந்தநாள்.ஏனெனில் இது பெண் வீட்டார் ஆந்திர முறைப்படி முடிவு செய்த தேதி.எப்படி ஆச்சயர்யத்தை நிகழ்த்துகிறார் பாருங்கள். அதைவிட அன்று முடிவு செய்த திருமண நாள் டிசம்பர் 9 ஜெ மறைவிற்கு 4 நாள் பிறகு.அப்போது எதுவும் தெரியாதே ஜெ இறந்து 2 நாள் கழித்து காரிலேயே பெங்களூர் வழி ஆந்திரா சென்றோம்.எந்த அசம்பாவிதமும் இன்றி எதிர்பார்த்ததை விட நன்றாகவே திருமணம் நடந்தது அவர் நடத்தியதல்லவா.
ஷீரடி சாய்பாபா சுமார் 100 வருடங்களுக்கு முன் வாழ்ந்தவர் அவர் அற்புதங்கள் எண்ணிலடங்காதவை சிவன் விஷ்ணு பிரம்மா மூவரும் சேர்ந்த தத்தாத்ரேயரின் மனித உருவமே சாய்பாபா என நம்பப்படுகிறது.அவர் செய்த அற்புத்ங்களுக்கு இன்றும் சாட்சிகள் உள்ளது.அவர் அற்புதங்களை செய்த போது நான் ஒன்றும் அற்புதங்கள் செய்யவில்லை நீர் நெருப்பு காற்று மூன்றும் பூமியில் இருக்கிறது அதைத்தான் நான் உங்களுக்கு எடுத்து தருகிறேன் என்றார்..உண்மைதானே அது.அவரின் குரு ஒரு முஸ்லீம் அவரும் முஸ்லீம் என அறியப்பட்டார் பக்தர்களை "அல்லா மாலிக்" என்று சொல்லி ஆசிர்வதிப்பார்.அவரின் பெற்றோர்கள் குறித்த தகவல்கள் இல்லை. மானுடம் பயனுற இறைவன் சிலதெய்வப்பிறவிகளை பூமிக்கு அனுப்புவார் அவர்களில் முக்கியமானவர் சீரடி சாய்பாபா அவர் ஒரு வட இந்திய திணிப்பு என்றால் வடக்கிலிருந்து நல்லது வந்தால் கூட ஏற்றுக்கொள்ள மாட்டோமா?? அவரின் பெயரால் சிலர் கொள்ளை அடித்தால் அவர்களை கவனியுங்கள் நிச்சயம் அதற்கான தண்டனையை அனுபவிப்பார்கள். சாய்பாபாவை வணங்குபவர்களுக்கு தொழில் சிக்கல் தீர்ந்து ஏற்றமடையும். இன்றும் அவர் கோவிலுக்கு செல்பவர் கள் வெறும் வயிற்றுடன் வீட்டுக்கு திரும்புவதில்லை. சாய்பாபா வுக்கு அவர்கள் மார்க்கெட் செய்கிறார்கள் என்பவர்கள் கோரக்க ரையும் போகரையும் மறந்துவிட்டார்கள் அவர்கள் பெற்ற நன்மையை மற்றவர்கள் அறிய பரப்புகிறார்கள். சென்னையில் இருக்கும் சாய்பாபா கோவிலை கட்டியவர் தமிழர் ஈரோட்டுக்காரர்.அங்கிருந்து ஆரம்பித்தது என்றே நினைக்கிறேன். சென்னையில் 30 க்கும் மேற்பட்ட சித்தர்களின் ஜீவ சமாதி உள்ளது. அன்னைக்காக முன்னையிட்ட தீ முப்புறத்திலே அன்னையிட்ட தீ அடிவயிற்றிலே என அழுத அருணகிரி நாதர், பாம்பன் சுவாமிகள் அவருக்கு அருகிலேயே சமகாலத்தில் மக்கள் முன்னால் பறந்து காட்டிய சக்கரத்தம் மாள் ஆகியோர் உள்ளனர்.
. அகத்தியரின் நேரடி சீடரான கோரக்கரின் நினைவாகவே வட இந்தியாவில் கோரக்பூர் என்ற நகரம் உள்ளது.ஆனால் நம்மில் பெரும்பாலோ னோருக்கு கோரக்கரின் சமாதி தமிழ்நாட்டில் எங்கே இருக்கிறது என்பது கூட தெரியாது.கோரக்கரும் போகரும் நமக்கு தெரியாதது தவறில்லை நமக்கு தெரியவில்லை என்பதால் அது இல்லை என்பதாகிவிடாது அல்லவா.காற்றை போலல்லவா அவர்கள்.போதி மரத்தடியில் புத்தர் ஞானமடந்த பிறகு புத்தரின் முதல் பிரசங்கத்தை கேட்டவர்கள் 6 பேர் மட்டுமே.புத்தர் நினைத்திருந்தால் ஒரு மகாராஜாவாக வாழ்ந்து முடித்திருக்க முடியாதா ??? தான் பெற்ற மகனை கட்டிய மனைவியை கதறி அழவிட்டுவிட்டு துறவறம் பூண்ட பிறகுசொன்னது "ஆசையே துன்பத்துக்கு காரணம்"இன்று நிகழும் பல துன்பங்களுக்கு காரணம் மண்ணாசை பெண்ணாசை இரண்டும்தான். அக்காலத்தில் எல்லோரும் கடவுளை பார்த்தேன் பார்த்தேன் என்கிறார்களே இப்போது ஏன் பார்க்க முடியவில்லை என்பவர்களே அக்கால மக்கள் பெரும்பாலோனோருக்கு தேவைக்கேற்ற உணவும் முக்தியும்தான் லட்சியமா யிருந்தது அவர்கள் கண்களுக்கு கடவுள் தெரிந்தார் அல்லது கடவுளை கடந்தார்கள். சுமார் 100 வருடங்களுக்கு முன்புவரை கூட நிலத்தை வாங்கி சொத்து சேர்க்க வேண்டும் என்ற எண்ணம் பெரும்பான்மையான மக்களுக்கு இல்லை .ஞானமடந்த பிறகு ஏசு பேசிய முதல் மலை பிரசங்கத்தை கேட்டவர்கள் 12 பேர்தான்.இயேசு இறந்து 300 வருடங்கள் கழித்துதான் இன்று உலகின் பெரிய மதமாக திகழும் கிறிஸ்தவ மதம் பரவ ஆரம்பித்தது. இயேசு பாலகன் வயதை கடந்த பிறகு வாலிப வயது வரும்வரை சுமார் 18-20 வருடங்கள் இந்தியாவில் இமயமலை யில்தான் இருந்தார் என சொல்கிறார்கள் சுவாமி ராமா அவர்கள் எழுதிய லிவிங்க் வித் ஹிமாலயன் மாஸ்டர்ஸ் புத்தகத்தில் அவர்கள் இயேசு வசித்ததாக சொல்லபடுகிற கோவிலின் படம் இருக்கிறது.ஆப்பிள் நிறுவனர் ஸ்டீவ் ஜாப்ஸ் மரண தருவாயில் தீவில் தனித்திருக்குபோது படித்தது இரண்டே புத்தகங்கள்தான் ஒன்று சுவாமி ராமாவின்" living with the himalayan masters" மற்றொன்று பரமஹம்ச யோகானந்தரின் "Autobiography of a Yogi" எல்லா உச்சங்களையும் தொட்ட ஸ்டீவ் ஜாப்ஸ் நம் சித்தர்களை அவர்களின் கருத்துகளை மதிக்கிறார் தன் வாழ்வின் கடைசி தருணங்களில் கூட அவர்களை பின்பற்ற நினைக்கிறார்.ஆனால் நாம் அவர்களை கிண்டலடித்துக் கொண்டிருக்கிறோம்.
பாகுபலியில் பெரிய சைஸ் சிவலிங்கத்தை சுமந்த பிரபாஸை வியக்கிறோம் அது நிஜமானது அல்ல ஆனால் காசியில் இருந்த சித்தர் ஒருவர் நிஜத்தில் அதே அளவு லிங்கத்தை தினமும் காலையில் சுமந்து சென்று அபிஷேகம் செய்து மீண்டும் மடத்துக்கு தூக்கிவருவார் அந்த லிங்கம் இன்றும் உள்ளது.அவர் பெயர் நியாபகம் இல்லை பரமஹம்ச யோகானந்தரின் குரு "லாகிரி மகசாய்" கண்முன்னே இருந்தபோதும் அவரை போட்டோ எடுத்தபோது அவர் அதில் விழவில்லை பிறகு யோகானந்தர் கேட்டுக்கொண்ட தால் ஒரே ஒரு போட்டோவில் உருவத்தை விழச்செய்தார். அவர் கண் முன்னே இருந்து கொண்டே இன்னொரு இடத்துக்கு ஆன்மாவாக சென்றதை யோகானந்தர் பதிவு செய்திருக்கிறார்.இளையராஜா ரஹ்மான் ஆகியவர்கள் சித்தர் வழிபாடு செய்பவர்களே.இளையராஜா ரமணரின் பக்தர்.இந்துவாக பிறந்து முஸ்லீம்ஆக கன்வெர்ட் ஆன ரஹ்மான் அல்லா நபிகளுக்கு பிறகு வணங்குவது ஒரு முஸ்லீம் பெரியவர் ஒருவரைத்தான். ராஜாவும் ரஹ்மானும் அவர்கள் முன் மண்டியிட்டதால் உலகம் அவர்களை நிமிர்ந்து பார்க்கிறது.பெரியோரை வணங்குதல் இழிவன்று அது பேறு.உலகில் மிக உயரத்தை தொட்டவர்கள் பின்னால் இவர்கள் போன்றவர்கள் இருப்பார்கள் அல்லது அவர்கள் பிரபஞ்ச சக்தியை நம்புபவர்களாக இருப்பார்கள்.அமெரிக்க ஜனாதிபதி ஜான் கென்னடி யிடம் பரிசு வாங்கிய சிறுவன் அந்த படத்தின் கீழே "நானும் இவர் போல அமெரிக்க ஜனாதிபதி ஆவேன்" என எழுதி வைத்தான் பின்னர் ஜனாதிபதியா கவும் ஆனான் அந்த சிறுவன் இரண்டு முறை அமெரிக்க ஜனாதிபதியாக இருந்த பில் கிளிண்டன் .அந்த எண்ணமும் அதை நோக்கிய ஓட்டமும் நினைத்ததை தொட வைத்தது. ஒபாமா கூட பாக்கெட்டில் ஆஞ்சநேயர் படம் வைத்திருப்பேன் என ஒரு பேட்டியில் சொன்னார்.பிரபஞ்ச வழிபாடு அல்லது எண்ண ஓட்டம் சித்தர் வழிபாடு பெரும்பாலும் உச்சம் தொட்ட அனைவரும் கடைபிடிக்கும் வழிமுறைகள். அவர்களின் சூத்திரங்களை வெளியில் சொல்வதில்லை அவ்வளவுதான்.அதற்காக வீட்டில் உட்கார்ந்து கொண்டு அவர் எனக்கு எதுவும் தரவில்லை என சொன்னால் நடக்காது.முயற்சியும் நம் லட்சியத்தை நோக்கி வைக்கும் முதல் அடியும் நமதாக இருக்கவேண்டும் மீதியை அவர்கள் பார்த்துக்கொள்வார்கள்.
சித்தர்களை தரிசிப்பது என்பது எளிதில் நிகழ்ந்துவிடாது நமக்கு கொடுப்பினை இல்லையென்றால் அவர்களுக்கு பக்கத்து தெருவில் நாம் இருந்தால் கூட நாம் அவர்களை சந்திக்க முடியாது பணம் பதவி போன்றவை அவர்களுக்கு பொருட்டல்ல.ஒரு உதாரணம் எம் ஜி ஆர் பிற்காலத்தில் கொல்லூர் மூகாம்பிகையின் பக்தர் ஆனார்.அடிக்கடி அங்கு சென்றும்வருவார். அப்படி ஒருமுறை போனபோது பிரசன்னம் பார்க்கிறார்கள் அதில் "நீங்கள் இங்கு வருவது இதுவே கடைசிமுறை அடுத்தமுறை உங்களால் வரமுடியாது "என்று பிரசன்னம் சொல்லியிருக்கிறார்கள்.எம் ஜி ஆர் அப்செட் ஆனபோதும் சென்னையில் இருந்து கொல்லூர் போக மீண்டும் முயற்சிக் கிறார் ஒருமுறை அல்ல மூன்று முறை ஒவ்வொரு முறையும் தள்ளிப்போகிறது ஒரு முதல்வரால் அருகில் இருக்கும் கொல்லூர் போக முடியவில்லை என்பதை நம்ப முடியுமா?/தடையை உடைக்க விதியை மதியால் வெல்ல ஒருமுறை ட்ரெய்னில் கொல்லூருக்கு புறப்பட்டுவிட்டார். ஒடும் ட்ரெய்னில் நடுவழியில் ஒரு பைத்தியம் போன்ற பெண் எம் ஜி ஆர் பயணம் செய்த பெட்டிக்கு சென்று அவரை அடித்து சட்டையை கிழித்து விட்டு போய்விடுகிறார்.ஒடும் ரயிலில் பாதுகாப்பை மீறி ஒரு பெண்ணால் எப்படிஎம் ஜி ஆரை அடைய முடிந்தது என்பதும் அந்த பெண் அந்த ட்ரையினில் எங்கு தேடியும் கிடைக்கவில்லை என்பதும் ஆச்சர்யம் இது என் சொந்த கருத்தல்ல வார்த்தை சித்தர் வலம்புரி ஜான் அவர்கள் எழுதியது.சித்தர்களை தொழுவதை கடைபிடித்த ராஜா கன்யாகுமரியில் இருந்த நிர்வாண பெண் சித்தரான மாயம்மாவை தன் வீட்டுக்கு அழைத்து வருகிறார்.அவருக்கு இளையராஜாவுக்கு சொந்தமான எதாவதொரு இடத்தில் வைத்து அவருக்கு ஆசிரமம் கட்ட எண்ணம்.மதுரை சென்னை ஏற்காடு ஒவ்வொரு இடத்துக்கும் ஒருகாரை யோசித்து நிறுத்தி அவர் எந்த காரில் ஏறுகிறாரோ அந்த ஊரில் தங்க வைத்து ஆசிரமம் அமைக்க திட்டம்.மாயம்மா இளையராஜா வீட்டில் இருப்பதை கேள்விப்படுகிற எம் ஜி ஆர் ராஜா வை போனில் அழைத்து மாயம்மா இருக்கிறாரா என உறுதிபடுத்தி கொண்டு "நான் அங்கே அவரிடம் ஆசிர்வாதம் வாங்க வரட்டுமா" என்கிறார் "என்னை என்ன கேட்கிறது நீங்க வாங்கண்ணே" என்றிருக்கிறார்.ராஜா போனில் பேசியது மாயம்மா விற்கு தெரியாது அவர் தொலைவில் அமர்ந்திருக்கிறார்.திடீரென என்ன நினைத்தாரோ எழுந்து வந்து ஏற்காடு செல்ல ரெடியாக இருந்த வண்டியில் அமர்ந்துவிட்டார் அவர் அமர்ந்த பிறகு வண்டியை நிறுத்த முடியாதே வண்டி ஏற்காட்டுக்கு கிளம்பிவிட்டது.
எம் ஜி ஆர் வந்தபோது மாயம்மா அங்கு இல்லை.அவரால் மாயம்மாவை கடைசிவரை சந்திக்கவே முடியவில்லை அவர்கள் சந்திக்க முடியாது என முடிவெடுத்துவிட்டால் முதல்வரே ஆனாலும் சந்திக்க முடியாது சந்திக்க வேண்டும் என முடிவுசெய்துவிட்டால் நம் வீடு தேடி வந்தாவது தரிசனம் தந்துவிட்டு போவார்கள்.
அன்பே சிவத்தில் "ஏன் கல்யாணமாயிடுசுன்னு பொய் சொன்னீங்க"ன்னு கேக்குறப்போ "மனசு நோண்டாமல் இருக்கனும்"ல்ல என்பார்.அதுபோல வாழ்வின் முற்பகுதியில் அறியாமல் சில பாவங்ளை செய்திருப்போம் கடவுள் /சித்தர் வழிபாடு செய்து நல்லவற்றை செய்தால் மனசு நோண்டாமல் நாமும் போகலாம்.சித்தர் வழிபாடும் நற்செயல்களும் இருந்தால் நம் விதிப்படி கை போக வேண்டிய இடத்தில் விரல் போகும் அவ்வளவுதான்.40 வயதுக்கு மேல் மனம் அளவுக்கு உடல் ஒத்துழைக்காது அதனால்தான் மனதை திசை திருப்ப கோவில்களுக்கு போக சொன்னார்கள் முக்தி அடைதலை லட்சியமாக கொள்ள சொன்னார்கள்.இப்போது இவற்றை ஒதுக்கி மனம் போன போக்கில் பலர் போவதால்தான் பல பெண் குழந்தைகளின் வாழ்வு சீரழிகிறது.உடல் முதிர்ச்சி ஏற்படும் அளவிற்கு பலருக்கு மன முதிர்ச்சி ஏற்படுவதில்லை. சித்தர்கள் வழிபாடும் அவர்களை பின்பற்ற வேண்டும் என்ற உந்துதலும் மனமுதிர்ச்சியை கொடுத்து நம்மை நம் மனதை அடுத்த கட்டத்துக்கு எடுத்து செல்கிறது"தெய்வம் மனுச ரூபேனா" இதுவே சித்தர்கள் நம்மை சந்திக்கும் நம் பயணத்தில் நம் சீட்டில் கூட அமர்ந்து கூட அவர்கள் வருவார்கள்.நான் திருவண்ணாமலை கிரிவலம் சென்ற புதிதில் 2001 ம் ஆண்டு என நினைவு காலையில் சாமி தரிசனம் முடித்துவிட்டு காலையில் நடக்க ஆரம்பித்தேன் அங்கு 10 மணிக்கே உச்சி வெயில் அளவுக்கு வெயில் அடிக்கும் நான் கால் சூடு தாங்க முடியாமல் இரண்டடி நிற்பதும் போவதும் என நடந்து வந்துகொண் டிருந்தேன்.பஸ் ஸ்டாண்ட் அருகே அப்படி கஷ்டபட்டு நடந்து கொண்டிருந்த போது வேகமாக சைக்கிளில் வந்த ஒருவர் என் அருகில் வந்து வண்டியை நிறுத்தி "சாமி உன்ன செருப்பு போடாம நடக்க சொல்லுச்சா" என கேட்டுவிட்டு போய்விட்டார். நான் அங்கேயே நின்று விட்டேன் "அட ஆமால்ல" என யோசித்தேன் . பிறகு அடுத்த முறை செருப்பு அணிந்தே கிரிவலம் சென்றேன் தூரம் செல்ல செல்ல செருப்பு சவுகரியமாக இல்லை .அடுத்த முறை அதிகாலை 2 அல்லது 3 மணிக்கு ஆரம்பித்து விடியற்காலையில் கிரிவலம் முடித்துவிடுவதை வழக்கமாக்கி கொண்டேன். சென்ற முறை அண்ணாமலை யில் ஏறி விருப்பாச்ச குகை கந்தாஸ்ரமம் சென்று பின்னர் ரமணாஸ்ரமத்தில் இறங்கிய போது செருப்பு அணிந்தே ஏறி இறங்கினேன்.
எந்த கடவுளும் மனிதனை /உடலை துன்புறுத்தும் வழிபாடுகளை செய்ய சொல்லவில்லை வழிபாடுகள் அனைத்தும் அறிவியல் மருத்துவ காரணங்களுக்காக உருவாக்கபட்டது. உதாரணமாக மலை உச்சியிலும் நடுக்கடலிலும் சுத்தமான காற்று கிடைக்கும் அங்கு போ என்றால் போக மாட்டோம் மலை உச்சியில் பெருமாள் கோவிலுக்கு போனால் நல்லது என்றால் போவோம் அதற்குதான் மலைகள் மீது கோவில்களை கட்டினார்கள். கஷ்டப்பட்டு ஏறிய பின் நாம் விடும் மூச்சு நம் நுரையீரலுக்கு டானிக் உடலுக்கும் நல்லது.ஆனால் குண்டம் இறங்க அலகு குத்த எந்த கடவுளும் சொல்லவில்லை.. சித்தர்கள் எல்லா ஊரிலும் இருக்கிறார்கள் உங்கள் ஊருக்கு அருகில் உள்ள சித்தர் ஒருவரை தேர்ந்த்தெடுத்து வழிபடுங்கள் .வழிபட ஆரம்பித்ததும் ஒரு சின்ன பிரச்சனை அதனால் ஒரு முடிவு சின்ன விபத்து இதெல்லாம் அவர் உங்களை ஏற்றுக்கொண்ட தற்கான அடையாளங்கள் பிரச்சனை ஏற்படுவது முடிவை எட்டுவதற்கே என்றே அணுக வேண்டும். சித்தர்களின் ஆசி என்பது நம் அப்பாவின் சொத்தை அனுபவிப்பது போல அவர்கள் நமக்காக சேர்த்துவைத் திருக்கிறார்கள் அவர்களின் வாரிசானால் நாம் அதை அனுபவிக்கலாம். சித்தர்கள் வழிபாடு பணமுதிர்ச்சியை தராது மனமுதிர்ச்சியை தரும். மகிழ்ச்சியும் நிறைவும்தான் நம் வாழ்வின் கடைசி கட்டத்தில் எடுத்து செல்ல போவது அதை சேர்க்க மனம் உறுத்தாத வாழ்க்கையை வாழ,கற்க நமக்கு முன்னே எப்படி வாழவேண்டும் என்று சொல்லிவிட்டு போன சித்தர்களின் அடியொற்றி செல்லுதல் நன்மை பயக்கும்,
🙏 "ஓம் நமோ பகவதே ஸ்ரீ ரமணாய"🙏

விடை கிடைக்காவிட்டால் தான் சித்தர்...
ReplyDeleteநன்றி...
அருமை
ReplyDelete