எம் ஜி ஆர் எப்படி என் லைப்குள்ள வந்தார்ன்னா என் நைனா மூலமாதான் ஈரோட்டில் கருங்கல்பாளையம் காமராஜர் ஸ்கூல் எதிரில்தான்நான் பிறந்து வளர்ந்தது நைனா ஈரோடு மளிகை மார்க்கெட்டில் மூட்டை தூக்குபவர் என்பதால் 6 மணிக்கு அங்கு இருப்பதற்காக 4.30 மணிக்கெல்லாம் எழுந்துவிடுவார் அப்போ ஒரு பக்கெட் எடுத்துட்டு போய் ஸ்கூல் எதிரில் உள்ள பைப்பில் குளிப்பது ரெகுலர் தண்ணி சும்மா வெதுவெதுன்னு வரும் நானும் அவர் கூட போவேன் ரெண்டுபேரும் குளிச்சிட்டு வீட்டுக்கு வந்துட்டு போடும் முதல் பாட்டு TMS புல்லாங்குழல் கொடுத்த மூங்கில்களே , கல்லானாலும் வகையறா பக்தி பாடல்கள் ஒன்றிரண்டு முடியும் போது சாமி கும்பிட்டு முடித்ததும் எம் ஜி ஆர் கேசட் போடுவார் "அச்சம் என்பது மடமையடா" "தூங்காதே தம்பி" டைப் தத்துவ பாடல்களா இருக்கும் வெங்காயம் கடிச்சு தயிர் ஊத்தி சோறு கரைச்சு குடிச்சுட்டு வேலைக்கு கிளம்புவார் மீண்டும் நான் ஸ்கூல் முடித்து வந்து படிச்சு முடிப்பேன் சாயங்காலம் நைனா வந்ததும் மீண்டும் எம் ஜி ஆர் பாடல்கள் ஆரம்பிக்கும் ரொமாண்ட்டிக் பாடல்கள் அன்று வந்ததும் "அதே நிலா" " ராஜாவின் பார்வை "டைப்பில் போகும் அதில் சிவாஜி ஜெய்சங்கர் இளையராஜா பாடல்கள் எல்லாம் வரும் அவர் என்னை படத்துக்குன்னு கூட்டிட்டு போனால் கூட எம் ஜி ஆர் படம் இல்லன்னா VSP தியேட்டர்களில் ரிலீஸ் ஆகும் இண்டியானா ஜோன்ஸ் டைப் படங்கள் மட்டும் தான் சிவாஜி கமல் ரஜினி படம்லாம் அம்மா கூட போறதுதான் .இவ்ளோ வியாபிச்சிருக்கிற எம் ஜி ஆரை எங்க ஏரியாவில் போட்ட கூட்டத்தில் மிக தூரத்தில் அவர் தொப்பியை பார்த்த ஞாபகம் நிழலாக உள்ளது அவரை பார்க்கவில்லை என்ற குறை தீராத மனக்குறையாகவே தங்கிவிட்டது இப்பவரை ரொம்ப ஸ்ட்ரெஸ் நேரங்களில் எம் ஜி ஆர் பாடல்கள் படங்கள் மீண்டும் என்னை சகஜமாக்குபவற்றில் ஒன்று ...தமிழ்நாட்டில் Infinity Man என்று சொல்லி அழைக்க கூடிய தகுதி எம் ஜி ஆர் ஒருவருக்கு மட்டுமே உண்டு அவர் இறந்து 33 வருடங்கள் ஆன பின்னும் அவரை பற்றிய செய்தி எப்போதும் காற்றில் இருந்து கொண்டே இருக்கும் ...இனி Infinity Man பற்றி
எம் ஜி ஆர் ன் க்கு வைத்த பெயர் "M.G.ராம்சந்தர்" தான் ஆரம்பகால படங்களில் அப்படியே வந்தது . பின்னாளில் நியூமராலஜி பார்த்து எம் ஜி ராமச்சந்திரன் ஆனார் ..ராம்சந்தர் என தவறாக குறிக்கப்பட்டது தமிழில் இப்படித்தான் என்று கூறப்பட்டாலும் நியமராலஜி பார்த்து பின் மாற்றி கொண்டார் என்பதே உண்மை .எம் ஜி ஆர் பற்றிய விஷயங்களில் பலர் சொல்வது அவர் மலையாளி என்று ஆனால் அவர் மலையாளி அல்ல அவர் மூதாதையர் காங்கேயத்தை சேர்ந்தவர்கள் கவுண்டர்களின் பிரிவை சேர்ந்தவர்தான் எம் ஜி ஆர் ன் மூதாதையர் ..அவர் கொங்கு தமிழன் ..அவர் தந்தையை ஏன் கோபால மேனன் என்று குறிப்பிடுகிறார்கள் என கேட்டால் வாழ்நாள் முழுதும் தெலுகு பேசிய "கட்ட பொம்மு"வை வீரபாண்டிய கட்டபொம்மனாகவே அறிகிறோம் அப்படி மருவிய வரலாறுகளில் ஒன்றுதான் அது .எம் ஜி ஆர் ன் தந்தை கோபால் கேரளாவில் வரிவசூல் செய்யும் வேலைசெய்தார் அந்த வேலை செய்பவர்கள் பகுதி நேர ஜட்ஜாக வேலை செய்யலாம் .ஒரு பிரச்சனையினால் அவர் இலங்கைக்கு செல்கிறார் .அங்கு அவர் கூலி வேலைகள் போன்ற வேலைகள் செய்கிறார் தொடர் வறுமை உடல்நல கோளாறில் அவர் இறக்க அங்கே எம் ஜி ஆர் ன் சகோதரியும் இறக்க இளம்விதவை சத்யபாமா இரண்டு மகன்களுடன் இந்தியா வருகிறார் பழைய பிரச்சனையில் அவர்கள் சொத்து கிடைக்காததால் அண்ணன் வகை உறவினர் வீட்டில் கும்பகோணம் வந்து செட்டில் ஆகிறார் ..அங்கு நாடகம் நடிக்க போய் நாடாண்ட வரை உள்ளோரும் அறிவர் ..அறியா சில விஷயங்கள் இந்த பதிவின் நோக்கம் என்பதால் அடுத்து ஆயிரத்தில் ஒருவன்
எம் ஜி ஆர் அப்போது ஆயிரத்தில் ஒருவன் இப்போது கோடியில் ஒருவன் ..கர்ணன் மிகப்பெரிய பட்ஜெட்டில் எடுத்த போதே சிவாஜிக்கும் பந்துலுவுக்கும் சில பிரச்சனைகள் கர்ணன் தோல்வி அடைந்தது அதை சரி கட்ட சிவாஜி நடித்து கொடுத்த படம் முரடன் முத்து ஆனாலும் தன் கடனை சரிகட்ட எம் ஜி ஆரை வைத்து எடுப்பதுதான் சரி என்று முடிவெடுத்து எம் ஜி ஆரை சென்று பார்க்கிறார் BR பந்துலு தம்பி ன் ஆஸ்தான டைரக்டர் என்பதால் தயங்கும் எம் ஜி ஆர் பிறகு டைட்டில் மட்டும் சொல்ல சொல்லி கேட்டு படத்தை செய்ய சம்மதம் தெரிவிக்கிறார் அட்வான்ஸ் ம் கேட்கிறார் உடனே பந்துலு தன்னிடம் பணம் ஏதும் இல்லை என்று சொல்ல உங்களிடம் இருப்பதை கொடுங்கள் என்கிறார் உடனே தன் டிரைவரிடம் பாக்கெட்டில் எவ்வளவு இருக்கிறது என்று கேட்டு அதை வாங்கி கொடுக்கிறார் 1 ரூபாய் அதுதான் ஆயிரத்தில் ஒருவனுக்கு பந்துலுவின் கடன் துடைத்த படத்துக்கு இன்று வரை பிளாக்பஸ்டர் என்று கொண்டாடப்படும் படத்துக்கு எம் ஜி ஆர் வாங்கிய அட்வான்ஸ் 1 ரூபாய்தான் ஒரு தயாரிப்பாளர் & இயக்குனர் க்கு இதைவிட நல்லதை செய்ய முடியுமா..ஜெ எம் ஜி ஆர் க்கு ஜோடி சேர்ந்த முதல் படம் விசுவநாதன் ராமமூர்த்தி காம்போ வின் கடைசி படம் என முக்கிய படம்
ஆயிரத்தில் ஒருவன் கடல் சார்ந்து நடக்கும் படம் என்பதால் பல இடங்களில் எடுத்தாலும் கோவா வில் அதிகம் சூட் செய்யபடுகிறது .ஒருநாள் சூட்டிங் கடலுக்கு நடுவில் உள்ள தீவில் நடக்கிறது அவர்களுக்கான உணவு கரையிலிருந்து வேளாவேளைக்கு வரும் ..அப்படி ஒரு மதியம் உணவுக்கு வரும் போது கடலில் உள்ள அதிக அலைகளால் உணவில் ஒரு பகுதி தட்டு இலைகள் போன்றவை கடலில் விழுந்து விடுகிறது .சூட்டிங் நடக்கும் இடத்துக்கு வருகிறார்கள் எம் ஜி ஆர் ரிடம் போய் தயங்கி தயங்கி நடந்ததை சொல்கிறார்கள் ..அதை கேட்டவர் இருக்கும் எல்லா உணவையும் ஒன்றாக கொட்டி கலவை சாதமாக செய்ய சொல்கிறார் பின் எல்லாரையும் வரிசையாக நிற்கவைக்க சொல்லி அனைவரும் நின்றதும் எம் ஜி ஆர் முதல் ஆளாக சென்று கை நீட்டி அந்த உணவை பெற்று கொள்கிறார் எம் ஜி ஆரே அப்படி பெற்று கொண்ட பிறகு மற்றவர்களுக்கு ஆட்சேபனை ஏது அனைவரும் அப்படியே சாப்பிடுகிறார்கள் அங்கு ஏற்பட இருந்த கசப்புணர்வு நீங்கியது எளிமையின் மறு உருவம் தலைவர்
எம் ஜி ஆர் உணவுக்கு முக்கியதுவம் கொடுப்பவர் ஆனால் அது
மற்றவர்க்கு கொடுக்கும் போது தனக்கு எது என்றாலும் சரி என்ற நிலையும் கொண்டவர் இப்போது எல்லோரும் பேலியோ டயட் செய்கிறார்கள் ஆனால் அப்போதே பேலியோ டயட் செய்தவர் எம் ஜி ஆர் அவருடன் சாப்பிடுபவர்களுக்கு அரிசி உணவு குறைவாக உண்ண சொல்வார் காய்கறிகள் அசைவ உணவுகளை அதிகம் உண்ண சொல்வார் என்பது பலர் மூலம்
தெரியவருகிறது..படகோட்டி யும் கடல் சார்ந்த படம் பெரும்பாலும் கேரளா வில் எடுக்கபட்டது .அப்போது அங்கு கடலில் கிடைக்கும் fresh மீன்கள் கொண்டு சமைக்கப்பட்ட உணவு படப்பிடிப்பில் கொடுக்கப்பட்டது.அப்போது உடன் நடித்த சரோஜா தேவியிடம் இங்க மீன்லாம் எவ்ளோ டேஸ்ட்டா இருக்கு அதில்லாம நம்மால இருக்க முடியுமான்னு தெரில இனி நான் இங்க மீன் சாப்பிடமாட்டேன் என்று சொல்லிவிட்டு அன்றிலிருந்து படத்தின் கேரளா போர்சன் முடியும் வரை நான்வெஜ் சாப்பிடாமலேயே விரதம் போல இருந்தார் என்று குறிப்பிட்டார் சரோஜா தேவி அப்படி தன்னை தன் உணவு கட்டுப்பாட்டை கூட பரிசோதிக்கும் தலைவன் ...எம் ஜி ஆர் படங்கள் ஒரே ஆர்டரில் சினிமாவில் பார்ப்பது போலவே எடுக்கப்படும்..அப்படி எடுக்கப்படும் போது கிளைமேக்ஸ் & டப்பிங்க்கு முன் எம் ஜி ஆர் அங்கு வேலை செய்பவர்களிடம் அவர்களுக்கு கொடுக்க வேண்டிய முழு சம்பளமும் கொடுக்கபட்டதா பாக்கி இருக்கிறதா என்று கேட்பார் அவர்களுக்கு சம்பளம் செட்டில் செய்யப்பட்டிருந்தால் ok என்றால் அதையும் உறுதிப்படுத்திகொள்வார் சம்பளம் இல்லையெனில் அடுத்த நாள் எம் ஜி ஆர் சூட்டிங் வர மாட்டார் தயாரிப்பாளரே அதை புரிந்து கொண்டு செட்டில் செய்து வேலை செய்பவர்கள் பணம் பெற்றுக்கொண்டோம் என்று உறுதி சொன்ன பிறகே சூட்டிங் க்கு வருவார் இதை செய்ததால் எம் ஜி ஆர் பட தயாரிப்பாளர்க்கு கெட்ட நடிகர்தான்
எம் ஜி ஆர் பட பாடல்கள் இப்போதும் தனியாக தெரியும் TMS அதிகம் பாடியிருந்தாலும் PBS SPB KJJ போன்றவர்களும் அவருக்கு பாடியிருக்கிறார்கள் அவருக்கு இளையராஜா பின்னணி பாடிய பாடல் இன்னும் வெளிவரவில்லை .எம் ஜி ஆர் ஒரு பாடலுக்கு எவ்வளவு சிரத்தை எடுத்து கொள்வார் என்பதை பார்க்கலாம் ...ஆயிரத்தில் ஒருவனில் ஒரு பாடல் சூழ்நிலை சொல்லப்பட்டு எழுதப்படுகிறது ...அப்போது கண்ணதாசனோடு கட்சியால் பிணக்கில் இருந்தார் எம்ஜிஆர் அதனால் வாலி உட்பட 6 பேருக்கு மேல் அந்த பாடலை எழுதியும் MGR க்கு திருப்தி இல்லை அவர் நினைத்தது வரவில்லை கிட்டத்தட்ட 20 க்கு மேற்பட்ட பாடல்கள் எழுதியும் திருப்தியில்லை பிறகு அவராகவே அவர்தான் சரி என்று முடிவு செய்து போன் செய்கிறார் மறுமுனையில் கண்ணதாசன் போனிலேயே எம் ஜி ஆர் சிச்சுவேஷன் சொல்ல கண்ணதாசன் எழுதி கொடுத்த பாடல் தான் "அதோ அந்த பறவை போல" பாடல் இப்போதும் கூட அந்த பாடலில் சுதந்திரகாற்றை நாம் சுவாசிக்க முடியும் கடல் நீரின் வாசனையை நுகர முடியும் அப்படி அவர் பாடலுக்கு தேவை என்றால் தன்னோடு முரண்பாடு உள்ளவரை கூட அணுகுவார் என்பதன் உதாரணம் இது ..அதேபோல் பாடல் ரெடியானதும் மக்கள் கேட்கும் சாதாரண டேப் ரிக்கார்டரில் கேட்டு பார்ப்பார் பெரும்பான்மை மக்கள் எப்படி கேட்கிறார்களோ அப்படி கேட்டால்தான் பாடலின் தரம் தெரியும் என்பாராம் ...எம் ஜி ஆர் மலையாளி என்ற எண்ணம் பலருக்குண்டு அதை அவர் முன் காட்டவும் செய்வார்கள் அதற்கு கண்ணதாசன் ம் விதிவிலக்கல்ல
பேசுவது கிளியா பெண்ணரசி மொழியா பாடலில்
பாடுவது கவியா -இல்லை
பாரி வள்ளல் மகனா
சேரனுக்கு உறவா
செந்தமிழர் நிலவா
சேரனுக்கு உறவா - "மலையாளியா"
செந்தமிழர் நிலவா - ராமச்"சந்திரன்"
என்று எழுதுகிறார் பாடலை பதிவு செய்த பின் எம் ஜி ஆரும் கேட்கிறார் நடிக்கிறார் பின்னர் பொது இடத்தில் கண்ணதாசனை சந்தித்த போது மேற்கண்ட வரிகளை சேரனுக்கு உறவா செந்தமிழர் நிலவா குறிப்பிட்டு காட்டிவிட்டு அப்படியா கவிஞரே என சிரித்துவிட்டு போய்விட்டார் ..இதை அண்ணாதுரை கண்ணதாசன் ஒரு பேட்டியில் சொன்னார் ..அவர் தன்னை மலையாளிகள் என்று கூறுபவர்களிடம் தன்னை தமிழன் என்று நிரூபிக்க முயலவில்லை .மலையில் விவசாயம் பார்த்த தமிழன் மலையாளி என்பார் என்று குறிப்பிடுகிறார் "வணக்கம்" ல் வலம்புரி ஜான் அவர் எம் ஜி ஆர் ன் பத்திரிக்கை ஆசிரியராக பணிபுரிந்த அனுபவம் உண்டு
இந்தியாவில் ஹிந்தி சினிமாவுக்கு பிறகு தமிழில்தான் மாஸ் கிளாஸ் படங்களின் விகிதம் சரியாக இருக்கும் ..மலையாள சினிமா போல எதார்த்த சினிமா பக்கம் ஒதுங்கி இருக்க வேண்டிய தமிழ் சினிமா மாஸ் மசாலா என்ற கமர்சியல் பாதையில் பயணிக்க முக்கியமான முன்னோடிகளில் முதன்மையானவர் எம் ஜி ஆர் ..ஆரம்பத்தில் தமிழ் தெலுகு ,மலையாளம் கன்னடம் என எல்லா மொழி படங்களும் மெட்ராஸை மையமாக வைத்தே இயங்கின .எம் ஜி ஆர் உச்சம் தொடும் முன்னரே சந்திரலேகா ஒளவையார் என பிரம்மாண்டங்களை தமிழ் சினிமா கண்டிருக்கிறது ஆனால் பி யூ சின்னப்பா MKT காலங்களுக்கு பின் / திடீர் சரிவுக்கு பின்னர் ஹீரோவுக்காக ஒரு மார்க்கெட் அதற்காக படம் positive கிளைமேக்ஸ் என்ற ட்ரெண்ட் எம் ஜி ஆரால் வந்தது ..அவர் நடிப்பில் anti climax படங்கள் பாசம், ராஜா தேசிங்கு தோல்வி படங்களே மதுரை வீரன் மட்டுமே அதில் ஹிட் காரணம் கை கால்கள் வெட்ட பட்ட பின்பும் சாமியாய் வந்து சிரிப்பார்..எம் ஜி ஆர் படங்களின் கதை என்றால் அம்மா செண்டிமெண்ட் அக்கா தங்கச்சி தம்பி சென்டிமென்ட் நேர்மையான போலீஸ் ஆபீசர் வாத்தியார் அரசு அதிகாரி டாக்டர் என்று கதைகளை அமைத்து கொள்வார் மாஸ் ஹீரோவாக இருந்தாலும் வில்லனை பெரும்பாலும் கொல்ல மாட்டார் கடைசியாக பேசி திருத்தி விடுவார் இல்லையெனில் வில்லனே தவறால் இறந்துவிடுவார் ..நாடோடி மன்னன் பெரிய இடத்து பெண் குடியிருந்த கோயில் மாட்டுக்கார வேலன் ஆயிரத்தில் ஒருவன் அன்பே வா ரகசிய போலீஸ் என் அவர் படங்களே இப்போது வரை கமல் ரஜினி விஜய் அஜித் காலம் வரை ஹிட் கதைகளை கொடுத்து கொண்டிருக்கிறது .அன்பே வா வில் தொடர்ந்து நாயகனுக்கும் நாயகி கும் இருக்கும் ஊடல்கள் பின்னாளில் குஷி சச்சின் என்று வந்தது ஹிட்டும் ஆனது .உலகம் சுற்றும் வாலிபன் ல் பேரழிவு ஆயுதத்தை கண்டு பிடிக்கும் விஞ்ஞானி மனது மாறி அதை ஒளித்துவைக்க அதை தவறான வழியில் உபயோகிக்க வில்லன் குரூப் தேட ஒரு கடல் கடந்த பயணம் புத்தர் சிலை குறிப்பு வரும் அதுவே கமல்த்தனம் தூவி நவராத்திரி கான்செப்ட் mix ஆகி உருவானதே விஸ்வரூபம் சிவாஜி படங்களில் மீள்உருவாக்கம் தனி ட்ரென்ட்..கமல் தனக்கான பாடல்களை கேட்டு வாங்கும் போது ஒரு பாடலை உதாரணம் சொல்வார் அது MGR சிவாஜி MSV ஹிந்தி ஆங்கிலம் என சிச்சுவேஷன் க்கு தக்கபடி இருக்கும் ..அப்படி நான் பார்த்ததிலே அவள் ஒருத்தியைத்தான் பாடலை உதாரணமாக காட்டி வாங்கிய பாடலே புது மாப்பிள்ளைக்கு நல்ல யோகமடா இப்படி அந்த லிஸ்ட் நீளும்
இப்படி மாஸ் படங்களின் குடோனாக இருந்த எம் ஜி ஆர் அவருக்கு சற்றும் சம்பந்தம் இல்லாத காதலும் ஊடலும் மையப்படுத்தி எடுக்கப்பட உள்ள படத்தில் நடிக்க சம்மதிக்கிறார் படத்தின் கதையை கேள்விப்பட்டு தான் நடிக்க வேண்டும் என்பதால் அவரே அந்த கதைக்கு உள்ளே வந்தார் என்ற தகவலும் உண்டு ஆரம்பத்தில் அப்போது இளம்நாயகனாக வந்த ஜெய்சங்கர் கதாநாயகனாக நடிக்க எழுதப்பட்ட கதை ..AVM அதற்கு முன்னும் பின்னும் MGR ஐ வைத்து படம் எடுக்கவில்லை ..ஏவிஎம் செட்டியாரை பொறுத்தவரை பூஜை போடும் போதே ரிலீஸ் தேதியும் சொல்லி படத்தை வியாபாரம் செய்பவர் ..MGR அப்போது சினிமா அரசியல் இரண்டு புல்லட்டிலும் ஸ்டாண்டிங்கில் வந்து கொண்டிருந்தவர் ..MGR ரசிகனான AVM சரவணன் அவரை வைத்து படம் எடுக்க அப்புச்சி இடம் அனுமதி கேட்க அவர் வைத்த கண்டிசன் ஒரே கால்ஷீட் நம் படம் முடிக்கும் வரை வேறு படங்கள் நடிக்க கூடாது. சொன்னது AVM என்பதால் கண்டிஷனுக்கு சம்மதித்தார் MGR
"அன்பே வா " ஆரம்பமானது .அப்போதைய லெவலில் தலைவர் 5 ரஜினி 10 அஜித் 10 விஜய் மாஸ்க்கு சமம் அப்படிப்பட்டவர் எப்படி காதல் கதையில் நடித்து ஹிட் கொடுப்பார் என்பதை பொய்யாக்கி பெரிய ஹிட் கொடுத்தார் அன்பேவா சிம்லா ஊட்டி பிறகு ஏவிஎம் செட்களில் படமாக்கபட்டது.அதில் எம் ஜி ஆர் தங்கியிருக்கும் அறையாக காமிக்கும் செட் AVM ல் தயாராகி கொண்டிருக்கிறது அதை பார்வையிட எம் ஜி ஆர் வருகிறார் உடன் சரவணனும் இருக்க அங்கு வேலை செய்யும் ஆட்களில் ஒருவரை உற்றுநோக்கியபடி இருக்கிறார் MGR ..பிறகு யோசனையாக அவரை அருகில் வர சொல்லி பெயரை சொல்லி நீங்கள் அந்த ட்ரூப்பில் ராஜபாட் வேடத்தில் நடித்தவர்தானே என்று கேட்க ஆமாம் என்றவர் ஏன் இந்த நிலை மற்றும் சூழ்நிலைகளை விளக்குகிறார் அடுத்த நாளில் இருந்து அவர் வேலைக்கு வரவில்லை எம் ஜி ஆர் அவருக்கு எந்தளவுக்கு உதவியிருப்பார் என்பதை என்னால் புரிந்து கொள்ள முடிந்தது என்று குறிப்பிட்டார் ஏவிஎம் சரவணன்
எம் ஜி ஆர் மீது சொல்லப்படும் பெரிய குற்றச்சாட்டு அவர் படங்களில் நடிப்பதை இழுத்தடிப்பார் என்பது அவர் சினிமா அரசியல் இரண்டிலும் ஒரே நேரத்தில் ஓய்வின்றி உழைத்து கொண்டிருந்தார் என்பதே உண்மை மிகப்பெரிய நடிகனாக இருந்தபோதும் தமிழ்நாட்டில் அவர் காலடி படாத கிராமங்களே இல்லை என்னுமளவுக்கு கட்சிக்காக சுற்றியிருக்கிறார் .ஒருநாள் காலையில் ஏற்பாடான கூட்டத்துக்கு இரவில் வருமளவுக்கு மக்கள் சந்திப்பும் கூட்டமும் இருக்கும் ஆனாலும் அவர் வராமல் கூட்டம் கலையாது அப்படிபட்டவர்களை பார்க்காமல் எப்படி இவர் வருவார் .எம்ஜிஆர் நடிப்பில்
அதிக நாட்கள் எடுத்த படம் - அரச கட்டளை - 6 வருடங்கள்
நாடோடி மன்னன் - 2 வருடங்கள்
குறைந்த நாட்களில் எடுத்த படம் - தேர்த்திருவிழா - 16 நாட்கள்
இதில் அரசகட்டளை படத்தின் தயாரிப்பாளர் & இயக்குனர் அவரின் அண்ணன் MG சக்ரபாணி நாடோடி மன்னன் தயாரிப்பு இயக்கம் எம் ஜி ஆர்
இதில் நாடோடி மன்னன் குறித்து மட்டுமே ஒரு பதிவு போடலாம்
உலகம் சுற்றும் வாலிபன் நாடோடி மன்னன் புது வீட்டுக்கு ஐஸ் வாங்கிட்டு போன எம் ஜி ஆர் ஒரு பாட்டுக்கு 60 டியூன் போட்டது வேலை செய்பவர்களுக்கு சம்பளம் கொடுக்க வழியில்லாமல் உடனடியாக படத்தில் நடிக்க சம்மதித்த எம் ஜி ஆர் ன்னு பல தகவல்களுடன் அடுத்த பகுதி ...
ref :
எம் ஜி ஆர் குறித்து வெளிவந்த புத்தகங்களும் பத்திரிக்கை செய்திகளும் தொடர்களும்

No comments:
Post a Comment