நான் இப்போது தீவிர கமல் ரசிகனாக இருந்தாலும் ,ஒவ்வொரு ரஜினி படரிலீசின்போதும் 12 வயதுவரை இருந்த உள்ளிருந்த ரஜினி ரசிகன் வெளியே வந்துவிடுகிறான். அந்த ரசிகனின் பார்வையில் இந்த படத்தின் விமர்சனம்!!
ஏனெனில் படத்திற்கு பின்னால் இருக்கும் உழைப்பு அப்படி.கமல் செய்திருக்கவேண்டிய படத்தை ரஜினிகாந்த் செய்திருக்கிறார்.இந்த படத்தை சாதாரண படமாக எடுத்தால் ரஜினியை பார்க்கிறோம் என்ற உணர்வை தவிர இந்த பிரம்மாண்டத்தை கண்முன் கொண்டுவந்திருக்க முடியுமா என்பது சந்தேகமே!!!இந்த படத்தை "மோசன் கேப்சர் ஃபோட்டோ ரியலிஸ்டிக்" முறையில் எடுத்தது மிகச்சரியே.படத்தின் கிராஃபிக்ஸ் அளவு "டின் டின்"க்கு அருகில் இருக்கிறது.
படத்தில் மூன்று ஹீரோக்கள்"ரஜினி,கே.எஸ்.ரவிக்குமார்,சௌந்தர்யா ரஜினிகாந்த் அஸ்வின்" ரஜினியின் மகள் என்பதற்காக தேவையில்லாமல் படம் எடுக்க வந்துவிட்டார் என்ற விமர்சனங்களை எல்லாம் உடைத்துவிட்டார் சௌந்தர்யா. 2 மணி நேரப்படத்தை தொய்வில்லாமல் கொண்டு சென்றிருக்கிறார். ரவிக்குமார்,ரஜினிகாந்தின் அனுபவத்தையும் தன்னுடைய புதுமையையும் இணைத்து ரசிகர்கள் இதுவரை பார்க்காத ரஜினியை காட்டியதற்கு சௌந்தர்யாவிற்கு ஸ்பெசல் பூங்கொத்து.
சிறப்பம்சங்கள்
1.திரு.நாகேஷ் அவர்களை திரையில் கொண்டுவந்து அந்த கேரக்டருக்கும் வேலை கொடுத்திருப்பது நாகேஷே டப்பிங் பேசியிருப்பதுபோல் அதை சாத்தியமாக்கியிருக்கிறார்கள்.
2.நாசர் அமைச்சரவையில் ராஜ குருவாக வருபவர் ரஜினியின் இஷ்ட தெய்வமான ராகவேந்திரரை போன்ற முகத்துடன் வடிவைக்கப்பட்டிருப்பது.
3.இடது கை பழக்கமுடைய ரஜினி தமிழ்பட சித்தாந்தங்களால் அதை அதிகம் வெளிப்படுத்துவதில்லை.ஆனால் இந்தபடத்தில் ராணா ரஜினியை இடக்கை பழக்கமுடையவராகவே காட்டியிருக்கிறார்.அதுவும் இடதுகையில் ரஜினி வாளை எடுத்து ஸ்டைல் செய்வது அழகு.
4.பிரம்மாண்ட அரண்மனைகள் ,பூங்காக்கள்,போர்க்களம் என பிரம்மாண்ட உலகத்தை நம் கண்முன் படைத்திருக்கிறார்கள்.
5.சண்டை காட்சிகள் ,பாடல் காட்சிகளில் சௌந்தர்யா & டீம்-ன் கடும் உழைப்பு தெரிகிறது.
6.கண்டிப்பாக இந்த படத்தை 3டி யில் பாருங்கள் கொடுத்தகாசுக்கு பைசா வசூல் . ரஜினியின் பெயர் போடும்போது இருக்கும் 3டி அதிசயம் படம் முழுக்க நம்மை வியப்பில் ஆழ்த்துகிறது.
படத்தின் ஆரம்பத்திலேயே "மேக்கிங் ஆப் கோச்சடையான்" போட்டு
பாமர ரசிகருக்கும் புரியும்படி விளக்கம் கொடுத்துவிடுகிறார்கள். இதனால் நம்மால் படத்துடன் ஒன்றிபோய் பார்க்க முடிகிறது. ரவிக்குமார் அல்லது ரஜினியின் ஐடியாவாக இருக்கலாம்.
கதை
தன் தந்தை கோச்சடையானை நயவஞ்சகமாக கொன்றவனையும் ,தந்தையை வஞ்சகத்தின் பிடியில் சிக்க வைக்க காரணமாக இருந்தவனையும் மகன் "ராணா" கொன்று பழிதீர்க்கிறான் ,தன் தந்தையின் லட்சியத்தையும் நிறைவேற்றுகிறான் .இந்த கதைக்கு எல்லோரும் ரசிக்ககூடிய திரைக்கதை அமைந்திருக்கிறார் K.S.R
கதை -திரைக்கதை -வசனம் கே.எஸ்.ரவிக்குமார் என்று போட்டதற்கான நியாயத்தை செய்திருக்கிறார் ரவிக்குமார்.வசனங்கள் ஒவ்வொன்றும் எளிதாக புரியும்படி அதேசமயம் ஆழமாக எழுதியிருக்கிறார்.ஆரம்பத்தில் ரஜினி சிற்றரசுகளை கைப்ப்ற்றுவதும் பின்பு ட்விஸ்டுமாய் வேகமெடுக்கிறது திரைக்கதை. "மோசன் கேப்சர்" படமாக இருந்தாலும் ரஜினியின் அறிமுகக் காட்சியில் கைத்தட்டல் தியேட்டரை அதிரச்செய்கிறது.
அதேபோல் கோச்சடையானுக்கு மரணதண்டனை நிறைவேற்றப்படும் காட்சியமைப்பில் (தசாவதாரம் சாயல் விழுவதை மறுக்கமுடியவில்லை) நம் கண்ணில் நீரை வரவழைத்திருக்கிறார். கிளைமேக்ஸ் போர்க்கள வசனங்கள் கிளாப்ஸை அள்ளுகிறது.படத்தை முடிக்கும் போது அவருடைய டச்சை காட்டுவதற்காக ஒரு ட்விஸ்ட் வைத்திருக்கிறார்.
A.R.ரஹ்மானுக்கு பீரியட் படங்களுக்கு இசையமைக்க தெரியாது என்ற கருத்தை அடித்து உடைத்திருக்கிறார்.ரஜினி பயணிக்கும் இரட்டை குதிரைகளில் ஒருவராய் பாய்ந்திருக்கிறார். "எங்கே போகுதோ வானம்" தியேட்டரில் பார்க்க ,கேட்க "வரம்",
"மெதுவாகத்தான்" கிளாசிக் வரிசை பாடல்
"மாற்றம் ஒன்றுதான் " ரஜினியின் குரலால் நம்மை வசீகரிக்கிறது .கோச்சடையானின் ருத்ரதாண்டவமும் படத்தின் பலங்களில் ஒன்று.
"கர்ம வீரன்" நரம்புகளை முறுக்கேற்றுகிறது .
ரஹ்மான் ரஜினி படத்துக்கு மட்டும் ஸ்பெசல் சிரத்தை எடுத்து வேலை செய்கிறார் எனத்தெரிகிறது . படத்தின் ரீரிக்கார்டிங் நன்றாக இருக்கிறது.
தீபிகா படுகோனே ,ஷோபனா,சரத் ,நாசர் ,ஆதி ,ருக்மணி ,ஜாக்கி ஷெராப், சண்முகராஜ் நன்றாக செய்திருக்கிறார்கள். ரஜினிக்கு சிக்ஸ் பேக் எல்லாம் நன்றாக இருக்காது ஏதோபோல் இருக்கும் என்றெல்லாம் சொன்னார்கள், அதெல்லாம் இல்லை நன்றாக ரஜினிக்கு பொருத்தமாக இருக்கிறது. ரஜினி படத்தில் ரஜினியை தவிர மற்றவர்களின் மீது கவனம் போகாது.அது இந்தபடத்திலும் மாறவில்லை.
படத்தில் மைனஸ் என்று பார்த்தால் இடைவேளைக்கு பிறகு வரும் அந்த சோகப்பாடல்தான்.அதை எடுத்துவிட்டால் இன்னும் பக்காவாக இருக்கும் .2 மணிநேரப்படம்தான் .படம் ஆரம்பித்தவுடன் சட்டென இடைவேளை வந்தது போல் தோன்றுகிறது. படம் முடிந்தவுடன் க்ரெடிட்ஸ் உடன் "மேக்கிங்" போடுகிறார்கள்.தவறாமல் பார்க்கவும்.
இந்திய சினிமாவில் முதன்முதலில் இந்த டெக்னாலஜியில் ஒரு தமிழ்ப்படம் வந்தற்கு நிச்சயம் பெருமைப்பட்டுக்கொள்ளலாம். "கோச்சடையான்" தமிழ் / இந்திய சினிமாவின் மைல்கல் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.
ரஜினி ஒரு பேட்டியில் "இது இன்னொரு படையப்பா,பாட்ஷா போல் ரசிகர்களுக்கு எண்டர்டெயின்மெண்ட் தரும்" என்று சொன்னார்.அது உண்மைதான் சௌந்தர்யா அதை உண்மையாக்கி காட்டியிருக்கிறார்.
சௌந்தர்யா ரஜினிகாந்த் அஸ்வின் அவர்களுக்கு
"வெல்கம் டூ தமிழ் சினிமா"

சூப்பர்,அருமையான பதிவு,பாராட்டுக்கள் -ரஜினிராமச்சந்திரன்
ReplyDeleteநன்றி சார் :)
ReplyDelete