தமிழ்நாட்டில் சித்தர்கள் ஏராளமானோர் இருந்துள்ளனர்,இருக்கின்றனர். அவர்களை பற்றி எனக்கு தெரிந்தது "Tip of the ice Berg" என்பதுவரை மட்டுமே. எனக்கு தெரிந்ததை இங்குபகிர்கிறேன் தவறுகள்இருந்தால் சுட்டிகாட்டலாம் ...
பொதுவாக சித்தர்கள் இருவகைப்படுவர் மக்கள்முன் தரிசனம்தந்து அவர்களுடன் இருப்பவர்கள் , காடுகளுக்குள்ளும் குகைக்குள்ளும் வசிப்பவர்கள் .இவர்களில் மக்கள்முன் தரிசனம் தந்த சித்தர்கள்
பற்றி பார்க்கலாம்
மக்கள்முன் தரிசனம்தந்த சித்தர்கள் சிலர்
பகவான் ரமணமகரிஷி
குருராகவேந்திரர்
கசவனம்பட்டி சித்தர்
சீர்டி சாய்பாபா
புட்டபர்த்தி சாய்பாபா
யோகி ராம்சுரத்குமார்
பிண்ணாக்கு சித்தர் (சென்னிமலை )
அருணகிரிநாதர் சேஷாத்ரி சுவாமிகள்
காஞ்சி மஹா பெரியவர்
புரவிபாளையம் சித்தர்(அ)கோடி ஸ்வாமிகள்
போன்றவர்களை சொல்லலாம் ...
சித்தர்களை ஏன் தொழவேண்டும் ?
பொதுவாக கோவில்கள் என்பது நம் ஊர்மாதிரி செல்வதால் நன்மைகள் உண்டு.பொதுவான பலன்கள் கிடைக்கும் ..சித்தர்கள் சமாதிக்கு செல்வது அல்லது அவர்களை சந்திப்பது நம் வீட்டுக்கு செல்வதுபோல பலன்கள்
சரியாக கிடைக்கும்,தக்கவழி காட்டுதலும் கிடைக்கும்.
வரலாற்றில் ஒரு செய்தியுண்டு அக்பர் தன்
மகன் ஜஹாங்கீர் நோய்வாய்பட்டு மரணபடுக்கையில் கிடந்தபோது தன் உயிரை
எடுத்துக்கொண்டு மகன் உயிரை காப்பாற்றுமாறு வேண்டிகொண்டதாகவும் அதனால்
ஜஹாங்கீர் உயிர் பிழைத்ததாகவும், பின் அக்பர் மரணம் அடைந்ததாகவும் சொல்வார்கள்.
நம்
வீட்டிலேயே நம் குழந்தைக்கு
உடல்நிலை சரியில்லாதபோது கடவுளிடம் அந்தகஷ்டத்தை எனக்குகொடுத்து குழந்தையை சரி செய்துவிடுங்கள்
என்று வேண்டுவதுண்டு.அதுவே சித்தர்களின் பணி!
நாம் அவர்களின் குழந்தைகள்!!
நாம் அவர்களின் குழந்தைகள்!!
“சித்தர்கள் நம்வீட்டில்
இருக்கும் தந்தையை போன்றவர்கள் நம்மை நல்வழிப்படுத்தி நம் கஷ்டங்களை வாங்கி கொள்பவர்கள்,இறையருளை
நமக்கு அளிப்பவர்கள்”
அவர்களை
தொழுபவர்கள் தெரியாமல்செய்த பாவங்களை தங்கள் உடலில் வாங்கி கொள்பவர்கள்.ரமணருக்கு கேன்சர்கட்டி வந்தது ,சீரடி சாய்பாபா உடலில் கட்டிகள் வந்திருந்தது .இது நம்மை காப்பதனால் அவர்களின் உடலுக்கு
வாங்கிகொண்ட
வலிகள்.
இதை வராமல் தடுத்திருக்க அவர்களால் முடியும்.ஆனால் அவர்கள் உடல்வேறு,ஆன்மாவேறு அவர்கள் வந்த காரியம்வேறு என்று தெரிந்திருந்ததினால் அதனை வாங்கி கொண்டார்கள்.
இதை வராமல் தடுத்திருக்க அவர்களால் முடியும்.ஆனால் அவர்கள் உடல்வேறு,ஆன்மாவேறு அவர்கள் வந்த காரியம்வேறு என்று தெரிந்திருந்ததினால் அதனை வாங்கி கொண்டார்கள்.
சாதாரண மானிடரான நாம் நினைக்கும்பாடலை அடுத்தவர் பாடுவதும், நாம் அமைதியாக இருந்தாலும் நம் மனதில் நினைப்பதை அறிந்து அடுத்தவர் செயல்படுவது போன்றவை நமக்குள்இருந்து வெளிவரும் அலைவரிசையால் நிகழ்கிறது .
இதுபோன்ற அலைவரிசையானது சித்தர்கள் வசித்த, வசிக்கின்ற இடங்களில் அவர்களில் இருந்து வெளிப்பட்ட நல்ல அலைவரிசை இருந்துகொண்டே இருக்கும் .அந்த இடங்களில் நாம் மேற்கொள்கின்ற தியானம்,தொழுதல்,உட்கார்ந்தபடி தூங்குதல் (?!) எதுவாகினும் அவர்கள் நம் அருகில் இருக்கின்ற உணர்வைதரும் .முதலில் நாம் அவர்களிடம் நம்மை கொடுக்கவேண்டும் .
ரமணர் சொல்வார் " நான் ரயில்பெட்டி போல என்னுள் ஏறியபின் உங்கள் பாரங்களை என்மீது இறக்கி வைத்துவிடுங்கள்,அதை நான் சுமந்துகொண்டு உங்களை அழைத்து செல்கிறேன், நீங்கள் தலையில் வைத்துகொள்ள வேண்டாம் "என்று.
முதலில் சித்தர்களை நம்பவேண்டும் பின்னர் அவர்களை
சரணாகதி அடையவேண்டும்.பின்னர் அவர்கள் நம்மை எல்லா சந்தர்பத்திலும் காத்துநிற்பார்கள்.
வாழ்ந்த காலத்தில், ஏதாவது ஒரு சித்து வேலையாவது மக்களுக்கு, பகதர்களுக்கு, சிஷ்யர்களுக்கு செய்து காட்டி இருப்பவர்களே சித்தர்கள். உடல் வேறு ஆன்மா வேறு என்று எதிலும் பற்றற்றவர்களா இருப்பவர்களே சித்தர்கள். தாடி வைத்தவர்கலேல்லாம் சித்தர்கள் கிடையாது.
ReplyDeletenaanum athaithaan solrenga ...
ReplyDelete