Friday, 2 November 2012

சித்தர்கள்



தமிழ்நாட்டில் சித்தர்கள் ஏராளமானோர் இருந்துள்ளனர்,இருக்கின்றனர். அவர்களை பற்றி எனக்கு தெரிந்தது "Tip of the ice Berg" என்பதுவரை மட்டுமே. எனக்கு தெரிந்ததை இங்குபகிர்கிறேன் தவறுகள்இருந்தால் சுட்டிகாட்டலாம் ...
 

பொதுவாக சித்தர்கள் இருவகைப்படுவர் மக்கள்முன் தரிசனம்தந்து அவர்களுடன் இருப்பவர்கள் , காடுகளுக்குள்ளும் குகைக்குள்ளும் வசிப்பவர்கள் .இவர்களில் மக்கள்முன் தரிசனம் தந்த சித்தர்கள் 
பற்றி பார்க்கலாம்

மக்கள்முன் தரிசனம்தந்த சித்தர்கள் சிலர்

பகவான் ரமணமகரிஷி 
குருராகவேந்திரர்
கசவனம்பட்டி சித்தர்
சீர்டி சாய்பாபா
புட்டபர்த்தி சாய்பாபா
யோகி ராம்சுரத்குமார்
பிண்ணாக்கு சித்தர் (சென்னிமலை )
அருணகிரிநாதர்                                                                                                               சேஷாத்ரி சுவாமிகள்
காஞ்சி மஹா பெரியவர் 
புரவிபாளையம் சித்தர்(அ)கோடி ஸ்வாமிகள்
போன்றவர்களை சொல்லலாம் ...

சித்தர்களை ஏன் தொழவேண்டும் ?

பொதுவாக கோவில்கள் என்பது நம் ஊர்மாதிரி செல்வதால் நன்மைகள் உண்டு.பொதுவான பலன்கள் கிடைக்கும் ..சித்தர்கள் சமாதிக்கு செல்வது அல்லது அவர்களை சந்திப்பது நம் வீட்டுக்கு செல்வதுபோல பலன்கள் சரியாக கிடைக்கும்,தக்கவழி காட்டுதலும் கிடைக்கும்.

வரலாற்றில் ஒரு செய்தியுண்டு அக்பர் தன் மகன் ஜஹாங்கீர் நோய்வாய்பட்டு மரணபடுக்கையில் கிடந்தபோது தன் உயிரை எடுத்துக்கொண்டு மகன் உயிரை காப்பாற்றுமாறு வேண்டிகொண்டதாகவும் அதனால் ஜஹாங்கீர் உயிர் பிழைத்ததாகவும், பின் அக்பர் மரணம் அடைந்ததாகவும் சொல்வார்கள்.
நம் வீட்டிலேயே நம் குழந்தைக்கு உடல்நிலை சரியில்லாதபோது கடவுளிடம் அந்தகஷ்டத்தை எனக்குகொடுத்து குழந்தையை சரி செய்துவிடுங்கள் என்று வேண்டுவதுண்டு.அதுவே சித்தர்களின் பணி!
நாம் அவர்களின் குழந்தைகள்!!
 



 சித்தர்கள் நம்வீட்டில் இருக்கும் தந்தையை போன்றவர்கள் நம்மை நல்வழிப்படுத்தி நம் கஷ்டங்களை வாங்கி கொள்பவர்கள்,இறையருளை நமக்கு அளிப்பவர்கள்  
அவர்களை  தொழுபவர்கள்  தெரியாமல்செய்த பாவங்களை  தங்கள் உடலில் வாங்கி கொள்பவர்கள்.ரமணருக்கு கேன்சர்கட்டி வந்தது ,சீரடி சாய்பாபா உடலில் கட்டிகள் வந்திருந்தது .இது நம்மை காப்பதனால் அவர்களின் உடலுக்கு வாங்கிகொண்ட வலிகள். 
இதை வராமல் தடுத்திருக்க அவர்களால் முடியும்.ஆனால் அவர்கள் உடல்வேறு,ஆன்மாவேறு  அவர்கள் வந்த காரியம்வேறு என்று தெரிந்திருந்ததினால் அதனை வாங்கி கொண்டார்கள்.
 


சாதாரண மானிடரான நாம் நினைக்கும்பாடலை அடுத்தவர் பாடுவதும், நாம் அமைதியாக இருந்தாலும் நம் மனதில் நினைப்பதை அறிந்து அடுத்தவர் செயல்படுவது போன்றவை நமக்குள்இருந்து வெளிவரும் அலைவரிசையால் நிகழ்கிறது .
இதுபோன்ற அலைவரிசையானது சித்தர்கள் வசித்த, வசிக்கின்ற இடங்களில் அவர்களில் இருந்து வெளிப்பட்ட நல்ல அலைவரிசை இருந்துகொண்டே இருக்கும் .அந்த இடங்களில் நாம் மேற்கொள்கின்ற தியானம்,தொழுதல்,உட்கார்ந்தபடி தூங்குதல் (?!) எதுவாகினும் அவர்கள் நம் அருகில் இருக்கின்ற உணர்வைதரும் .முதலில் நாம் அவர்களிடம் நம்மை கொடுக்கவேண்டும் .
ரமணர் சொல்வார் " நான் ரயில்பெட்டி போல  என்னுள் ஏறியபின் உங்கள் பாரங்களை என்மீது இறக்கி வைத்துவிடுங்கள்,அதை நான் சுமந்துகொண்டு உங்களை அழைத்து செல்கிறேன், நீங்கள் தலையில் வைத்துகொள்ள வேண்டாம் "என்று.
முதலில் சித்தர்களை நம்பவேண்டும் பின்னர் அவர்களை சரணாகதி அடையவேண்டும்.பின்னர் அவர்கள் நம்மை எல்லா சந்தர்பத்திலும் காத்துநிற்பார்கள்.

Tuesday, 2 October 2012

அழகென்ற சொல்லுக்கு

                                கண்டிப்பா இது அட்வைஸ் இல்ல 


               பதின்ம வயதுகளில் எல்லோருக்கும் வருவது போல எனக்கும் பரு வந்தது,, ஆனா முகமெல்லாம் வந்துருச்சு, ஏற்கனவே ஒல்லி (45கிலோ)  இதுல இதுவேற. அம்மா யாரோ கொடுத்தாங்கன்னு ஒரு மருந்து கொடுத்தாங்க, முகத்துக்கு போடுறதுக்குன்னு சொல்லி,நைட்டு போட்டுட்டு படுத்தாச்சு. காலையில பார்த்தா முகத்துல பரு இல்ல,ஆனா பரு இருந்த இடத்துல எல்லாம் உளிய வெச்சு குத்துன மாதிரி குழி.அன்னைக்கு ரொம்ப வருத்தப்பட்டேன்.

                 என் மேல் இருந்த கொஞ்ச நஞ்ச நம்பிக்கையும் போயிடுச்சி ஆனா குடும்பசூழல் அதைகுறித்து அதிக வருத்தப்படவிடல. சோத்துக்கே வழி இல்லாதப்போ சுகம்குறித்து கவலை எதற்கு?!! எப்படியோ தட்டுதடுமாறி ஐசிஐசிஐ பேங்க் ஏஜன்சில வேலைக்கு சேர்ந்துட்டேன்.அப்ப கூட  28-இஞ்ச் பேண்டையே பெல்ட்வெச்சு போட்டாத்தான் உடம்புல நிக்கும்கிற நிலம.. ஒல்லி, மாநிறம் , முகத்துல குழி எப்படி வரும் கான்ஃபிடென்ஸ்.. ஆனாலும் வேலையில கெட்டியா இருந்தேன்..கொஞ்சம் நல்லா வாயும் பேசுவேன்.

              அப்பதான் ஒரு கஸ்டமர பார்க்க போனேன்.அவரு நல்ல கஸ்டமரு 1 லட்சம் டெபாசிட் கொடுத்தாரு.வேலைமுடிஞ்சு கிளம்புனப்போ பேசிகிட்டே கூட வந்தாரு .நான் "என்னை மறந்துடாதீங்க சார் அடுத்த டெபாசிட்டுக்கும் என்னையே கூப்பிடுங்க" அப்டினேன்.அவரு "எப்படி சார் மறப்பேன் .உங்கள மறந்தாலும் உங்க ஹேர் ஸ்டைல மறக்கமாட்டேன்" அப்டின்னாரு..அப்பதான் என்னோட ஹேர் ஸ்டைலை நானே கவனிச்சேன் ..நான் தலையை ஆட்டி பேசும்போது ஆடும்படி ஃபிலெக்சிபிளாக இருந்தது அவரு என்னை நிஜமா  பாராட்டி அப்படி சொன்னாரான்னு கூட தெரியாது.

             ஆனா அன்னைக்குதான் மத்தவங்க நம்ம கவனிக்கிறாங்க., எல்லாரும் முகஅழகை மட்டும் கவனிக்கிறதில்ல,நம்மகிட்டயும் அடுத்தவங்க பாராட்ட ஒரு விசயம் இருக்குன்னு தெரிஞ்சுக்கிட்டேன் ( இந்த சம்பவத்துக்கு முன்னும் பின்னும், எப்பவும் இப்பவும் என் தலைமுடிய கவனிச்சதில்ல ) ஆனாலும் என் பதினைந்து வயதுக்கு பிறகு  இன்றுவரை பவுடர், ஃபேர் அன் லவ்லி போன்ற அழகுசாதன பொருட்களை நான் உபயோகப்படுத்தியதில்லை.

               இப்ப நான் உபயோகிக்கும் அழகு சாதன பொருட்கள் பாடிஸ்ப்ரே (மற்றவர்களின் நலன் கருதி ), சீப்பு- அதுவும் ஒருநாளைக்கு ஒரு தடவை இல்லைன்னா ரெண்டுதடவை ..அப்பஇருந்து இப்பவரை ஓரளவுக்கு ட்ரெஸிங் சென்ஸ் உண்டு...என்னோட உடம்புக்கு சூட் ஆகலைன்னா எவ்வளவு நல்லடிசைனா இருந்தாலும்  அந்த டிரெஸ் போடமாட்டேன் .இப்ப தலையில் பாதிமுடி கொட்டிருச்சு, நரைச்சும் போச்சு ,உடம்பு வெயிட்டும் போட்டாச்சு     (75 கிலோ) ஆனாலும் அழகுகுறித்த கவலைமட்டும் மறுபடி வரவே இல்ல...

              நாம அழகா இருந்தாலும், இல்லைன்னாலும் ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொன்னு பிடிக்கும்,நம்ம வேலையை சரியா செஞ்சாபோதும், சுத்தமா இருந்தாபோதும் .மத்தவங்களுக்கு நம்ம பிடிக்கும்.அதனால அழகு குறித்து யாரும் கவலைப்பட தேவையில்லை ..

மறுபடியும் சொல்றேன்,, இது கண்டிப்பா அட்வைஸ் இல்ல!!!

Monday, 20 August 2012

நான் எப்படி கமல் ரசிகனாக மாறினேன்



                              நான் எப்படி கமல் ரசிகனாக மாறினேன்


                1980 களில் பிறந்த பெரும்பான்மையான குழந்தைகள் ரஜினி ரசிகர்களே ..நானும்  அதில் ஒருவனே ...நான்  எப்படிபட்ட ரசிகன் என்றால் "வெச்சுக்க வா  உன்னை  மட்டும்" பாடலுக்கு ரஜினியை போலவே உடலில் லைட்  கட்டிக்கொண்டு ஆடும் அளவுக்கு ...ஆச்சர்யம் அப்படி ஆடிய அடுத்தநாளே நான் கமல் ரசிகனாக மாறினேன்.என் பெரியம்மா மகனான என் அண்ணன் அப்போது கமல் ரசிகர் மன்றத்தில் மாவட்டஅளவில் முக்கிய பொறுப்பில் இருந்ததுடன் ,எங்கள்  ஏரியாவின் கமல் ரசிகர்மன்றத்தின் தலைவராகவும் இருந்தார் .வருடாவருடம் கமலின் பிறந்தநாளுக்கு கமல் படங்களை டிவி-வைத்து எங்கள் தெருவில் போடுவதை வழக்கமாக  கொண்டிருந்தனர் மன்றத்தினர்.அப்படி படம் போடுவதற்கு முன்புதான் நான் அந்த ரஜினி பாட்டுக்கு ஆடியது ...


              அன்று சகலகலா வல்லவன், தூங்காதே தம்பி பார்த்ததாக  நியாபகம்.அடுத்தநாள் பகலில் "பேர் சொல்லும் பிள்ளை" படத்தை ரசிகர்மன்றத்தினர் பக்கத்துவீட்டில் வைத்து பார்த்துக்கொண்டிருந்தனர்.நான் படம் பார்க்கபோனேன் ,பகல் என்பதால் வெளிச்சத்திற்காக கதவை மூடியிருந்தனர் கதவை திறக்கசொல்லி நான் கேட்டதுக்கு ரஜினி ரசிகன்தாண்டா நீ, அதுனால உன்னை உள்ளே விட முடியாது என்றார்கள். நான் எவ்வளவோ கெஞ்சி பார்த்தேன் வேலைக்கே ஆவல..அப்றம் அழுகைதான் ..எங்க அண்ணன் கொஞ்சம் மனசுவந்து இனிமே கமல் ரசிகனாக மாறிடுறேன்னு சொல்லு நான் உன்ன உள்ள விட்றேன்...சரிண்ணா இன்னேலேர்ந்து நான் கமல் ரசிகன்‍‍‍ -இது நானு.
            அன்று பேர் சொல்லும் பிள்ளை பிள்ளைக்காக கமல் ரசிகனாக மாறியவன் விசயத்தில் வந்த ஆச்சர்யமான அதிர்ச்சிதான் "குணா"
குணா படம் பார்த்துவிட்டு வந்தபின் எதோ ஒன்று உறுத்திகொண்டே இருந்தது.ஆனால் அது கமலின் நடிப்பும், திரைக்கதையும்தான் என உணருமளவுக்கு பகுத்தறிய முடியவில்லை.இதற்கிடையில் பார்த்த "தளபதி" எனக்கு பெரியபாதிப்பு எதையும் ஏற்படுத்தவில்லை..
             சிலநாட்கள் கழித்து இங்கு தேவர்மகனும் அங்கு பாண்டியனும் ரிலீஸ்.வழக்கத்திற்க்கு மாறாக கமல் படத்தை நெருங்கமுடியல.பாண்டியன் பார்த்தாச்சு "கடி".கிட்டதட்ட 15 நாளுக்கு அப்புறம் தேவர்மகனுக்கு சென்றால் டிக்கெட் கிடைக்கும் என்ற நிலை.எங்க கார்த்தி அண்ணனை கூட்டிட்டு கிளம்பியாச்சு.
                 ஈரோட்ல முட்டை கொட்டாய் எனப்படும் ஆனூர் தியேட்டரில் படம்ஓடுது. அந்த தியேட்டர்காரன் ஒவ்வொரு 4 ரோவையும் ஒரு கிளாஸா பிரிச்சிடுவான்.இதுல பாதிக்கு மேல ப்ளாக்ல டிக்கெட்டை தியேட்டர்காரனே விப்பான். நாங்க வாங்கினது 1 கிளாஸ் டிக்கெட்.ஆனா எங்களுக்கு இடம் கிடைச்சதென்னவோ முதல்வரிசை சிவாஜி அறிமுகம் முடிஞ்சு உள்ள போறோம் ..
            டிரெயின் வருது திரையை அண்ணாந்து பார்த்தபடி நான் இருக்கேன் கமல் டிரெயின்ல இருந்து வெளிய வர்றார்,, ரசிகர்களின் கைதட்டல்களோடு அப்டியே கண்ணு முன்னாடி பிரம்மாண்டமா தெரியுறார். அப்டியே மண்டைக்குள்ளும் இறங்குறார் கமல். முதல்வரிசை கழுத்துவழி தெரியல..படம் ஓடுது,, சிறுவனும் புரிந்துகொள்ளும் எளிதான அதே சமயம் அழுத்தமான திரைக்கதை..அந்தகிளைமாக்ஸ் மகா அழுத்தம் "போய் புள்ளைங்கள படிக்க வைங்கடா" வசனம் காதில் ஒலித்துக்கொண்டே இருக்கிறது..கமல் அரெஸ்ட் செய்யப்பட்டு டிரெயினில் ஏறி வணக்கம்  சொல்லும்போது படத்தின் ஆரம்பத்தில் பார்த்த கமலின் பிரம்மாண்டம் குறையாமல் கமல் இருக்கிறார். நான் கமலை உள்வாங்கிக்கொண்டேன்.



நான் முழு கமல் ரசிகனாக மாறிப்போன தருணம் அது.....

கமல் தொடருவார்.....