Friday, 16 March 2018

அன்பே சிவம்


இது தற்புகழ்ச்சிக்கோ பாராட்டவோ எழுதப்பட்ட பதிவு அல்ல அனுபவ பகிர்வு அவ்வளவே இதை நீங்கள் பார்க்கும் பார்வை உங்களுடையது

செவ்வாய்  காலை எப்போதும் போல ஆபீஸ் லேருந்து பேங்கில் பணம் கட்டுவதற்காக போனேன் பேக்கில் சுமார் 2 லட்சம் இருந்தது ஒரே வழக்கமான ரோடுதான் வேற வழி இல்ல ஆற்று பாலம் கடந்துதான் போக வேண்டும் ..பாலத்திற்கு அருகில் போனப்போ துணி குவியலோ அடிபட்ட நாயோ தெரியல ஆனா கிடந்தது ...நான் கொஞ்சம் அருகே போனப்புறம் தான் தெரிஞ்சது ஒரு ஆள் கிட்டத்தட்ட நடுபாலத்தில் குப்புற விழுந்து கிடக்கிறான் வண்டிகள் அருகில் வந்ததும் ஆளை பார்த்ததும் தள்ளி செல்கின்றன எவ்ளோ நேரம் கிடக்கிறான் அடிபட்டா இல்ல குடித்துவிட்டான்னு எதுவும் தெரில ஆனா குப்புற கிடக்கிறான் ..எனக்கு பயம் என்னான்னா பேக்கில் பணம் வேற இருக்கே எவனாவது வர்ற டைம் தெரிஞ்சு ஸ்கெட்ச் கீது போட்டுட்டானோன்னு தான் இருந்தாலும் பரவால்ல ன்னு பேக்கை ஒரு பக்க தோளில் இழுத்து விட்டுகிட்டு குனிஞ்சு அவன் தோள் பிடித்து தூக்கினேன் வாயெல்லாம் ரத்தம் ,இரண்டு கையளவு அகலத்துக்கு ரத்தம் வழிஞ்சு ரோட்டில் கிடக்கு ...முடிஞ்சளவு தூக்கி பார்த்தேன் அப்புறம் அந்த அந்தபக்கம் போன ஒரு பையன் ஹெல்ப் பண்ண எழுப்பி ரோட்டின் ஓரம் உட்காரவைத்தோம் .அப்புறம் 108 க்கு போன் பண்ணினேன் .கொஞ்சம் கூட்டமும் கூடிச்சு ..ஆள் குடித்திருக்கிறான் ன்னு தெரிஞ்சது ஆனா அடிபட்டா இல்ல தன்னாலேயே விழுந்தானான்னு தெரில ..பிறகு அந்த ஆளை பசங்க தூக்கி பாலத்தின் நடைபாதையின் மேல உட்காரவெச்சாங்க ,,அப்புறம் அங்கே மெயின் ரோட்ல இருந்த ஆம்புலன்ஸ் க்கு யாரோ போன் பண்ணி உடனே வந்துச்சு அந்தாளே நடந்து போய் ஏறிக்கிட்டாப்படி..பிறகு நானும் பேங்குக்கு போய்ட்டு ஆபீஸ் க்கு வந்து வேல பார்க்க ஆரம்பிச்சுட்டேன் ..என்னோட கில்டி என்னான்னா நானே அந்த ஆளை தூக்கி உட்கார வெக்கலியே 2 லட்சம் முக்கியமா தெரிஞ்சுதேன்னுதான் ..நாள்பரபரப்பில் மறந்தே போனேன் .

புதன் காலைல எப்பவும் போல பேங்குக்கு போனேன் பணம் கட்டிக்கிட்டு இருந்தப்ப அங்க நகை வேல்யுவரா இருக்கும் பெண் வந்து "என்ன சார் நேத்து ஹீரோயிசம் லாம் பண்ணினீங்க" ன்னாங்க "புரியலையே" ன்னேன் "நேத்து
பாலத்துல கிடந்தவரை எல்லாரும் கண்டுக்காம போக நீங்க மட்டும்தான் போய் தூக்கிகிட்டுருந்தீங்க"ன்னாங்க "கூட பசங்க வந்து ஹெல்ப் பண்ணினாங்க ன்னேன் பணம் பேக்ல இருந்துச்சு இல்லன்னா நானே தூக்கி ஓரமா வெச்சிருந்திருப்பேன் "ன்னேன் ,உங்கள பார்க்கலையே ன்னதுக்கு உங்கள கிராஸ் பண்ணின மினிபஸ்ல இருந்தேன் ன்னாங்க

அப்போ கேஸ் கவுண்டர்ல இருந்த பொண்ணுகிட்ட "நீங்க வந்தப்பையே அந்தாள பார்த்தீங்க தானே" னாங்க ஆமா நான் 9.45 க்கு வந்தப்பவே கிடந்தார் குடிச்சிட்டு கிடக்கிறாருன்னு விட்டுட்டு வந்துட்டோம் "ன்னு சொன்னாங்க.

நான் பேங்குக்கு வந்தப்ப கிட்டத்தட்ட 10.15 இருக்கும் கிட்டத்தட்ட அரைமணி நேரம் நடு பாலத்திலேயே கிடந்திருக்கான் ன்னு ஆச்சரியப்பட்டேன் ...அப்பறம் கேஷியரிடம் "அவன் குடிச்சிருந்தது உண்மைதான் அவன நம்பி ஒரு குடும்பம் இருக்குமே அவனுக்கு காலில் கையிலேயே வண்டி கவனிக்காம ஏறி ஊனமாயிட்டா இன்னும் கஷ்டமாகிடும் அதான் ஹெல்ப் பண்ணினேன்"ன்னு சொல்லி அப்புறம் அவனுக்கு அடிபட்டது ஆம்புலன்ஸ் வந்ததெல்லாம் சொன்னேன் ..கேட்டுவிட்டு  கேஷியர் பொண்ணு "குடிச்சிட்டு கிடந்தா பொதுவா கண்டுக்காம போயிடுவோம் இனிமே இப்படி யாராவது அடிபட்டு கிடந்தா பார்த்து ஹெல்ப் பண்றேன் சார்"ன்னு சொன்னாங்க ..

        பேசிட்டு வெளியே வந்தப்ப மனுஷன யாரும் பார்க்கலைன்னு நினைச்சு பல வேலை செய்யுறோம் செய்யாமயும் இருக்கிறோம் ஆனா எல்லாத்தையும் மேல இருந்து ஒருத்தன்  பார்க்கிறான் அவனுக்கு எல்லாம் தெரியும்
யார்ட்டையும் போய் நம்மளை நிரூபிக்க வேண்டியதில்லை  தேவைப்படும் போது அதுவே வெளிவரும் ன்னு தோணுச்சு நம்ம வேலையை நமக்கு சரின்னு தோணுறதை கொஞ்சம் மனிதாபிமானத்தோடு செஞ்சிக்கிட்டிருந்தா போதும் "அன்பே சிவம்"